Connect with us
Cinemapettai

Cinemapettai

kamal-mnm

India | இந்தியா

கமலஹாசனுக்கு மறுக்கப்பட்ட சின்னம்.. கொந்தளித்து விஸ்வரூபம் எடுக்கும் ஆண்டவர்!

தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கிவரும் காரணத்தால் ஒவ்வொரு கட்சியினரும் முனைப்புடன் செயல்பட்டு வருகின்றன. இதனால் தேர்தல் ஆணையம் ஒவ்வொரு கட்சியினருக்கும் சின்னங்களை தற்போது ஒதுக்கியுள்ளது.

அந்த வகையில் தமிழகம் புதுவையில் நாம் தமிழர் கட்சிக்கு விவசாயி சின்னம் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்துக்கு பிரஷர் குக்கர் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.

ஆனால் நடிகர் கமலஹாசனின் மக்கள் நீதி மையம் கட்சிக்கு தமிழகத்தில் எந்த ஒரு சின்னமும் இன்றுவரை ஒதுக்கப்படவில்லை. ஆனால் புதுச்சேரியில் மட்டும் பேட்டரி டார்ச் லைட் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமில்லாமல், தமிழகத்தில் எம்ஜிஆர் மக்கள் கட்சிக்கு பேட்டரி லைட் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கி இருக்கின்றனர் என்ற தகவலும் கிடைத்துள்ளது. இதனால் கொந்தளித்த கமலஹாசன் திண்டுக்கல்லில் கட்சியினருடன் நடைபெற்ற கலந்துரையாடலில் சின்னம் ஒதுக்கபடாததற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மேலும் அந்தக் கூட்டத்தில் கமல் சுதந்திரப் போராட்டத்திற்கான முதல் சிப்பாய் கலகம் 1850 இல் நடக்கவில்லை, 1757 ஆம் ஆண்டு கான்சாகிப் மருதநாயகம் மதுரையில் போராடினார். அவரைத் தொடர்ந்து தான் திப்பு சுல்தான், வேலு நாச்சியார் போன்றவர்கள் சுதந்திரத்திற்கான விதையை வித்திட்டனர். இது திண்டுக்கல்லின் பதிய பழைய கதை என்றும்,  திண்டுக்கலில் மீண்டும் அதே போல் ஜனநாயகத்தைப் பேணிக்காக்க ஒரு புரட்சியை உருவாக்கலாம் என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.

அதுமட்டுமில்லாமல், இந்திய ஜனநாயகம் நோய்வாய்ப்பட்டு இருப்பதாகவும், தனது கட்சியில் நிறைய டாக்டர்கள் இருப்பதாகவும், தன்னுடைய ஊசி கயவர்களுக்கு மட்டும்தான் வலிக்கும் என்றும் காட்டமாக பேசியுள்ளார் கமல்.

மேலும் பேசிய கமல், “ஆட்சியில் மாற்றங்கள் செய்ய காத்துக் கொண்டிருக்கும் நமக்கு டார்ச் லைட் இல்லை என்று கூறிவிட்டனர்.  அதனால் என்ன, நாம் கலங்கரை விளக்கம் கேட்போம். இதனால் நம்முடைய சாதாரண ரூபத்தை விஸ்வரூபமாக எண்ணுகின்றனர் என்பது தெளிவாக தெரிகிறது. எதிரணிக்கு நம்மளுடைய வரவு பெரும் அடியாக இருக்கும் என்று நான் எண்ணுகிறேன்’ என்று கூறியுள்ளார்.

Kamal

Kamal

இதனிடையே தன்னுடைய ட்விட்டர் பக்கத்திலும், ‘நாக்கை  மட்டும் நம்புவோருக்கு இங்கு வேலை இல்லை. நான் மக்களை நம்புகிறேன். #எதுவும்-தடையல்ல’ என்று பதிவிட்டுள்ளார் கமலஹாசன். எனவே, இவ்வாறு கமலஹாசன் டார்ச் லைட் சின்னம் தராததால் கோபப்பட்டு கொண்டிருக்கும் தகவல்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

Continue Reading
To Top