டாப்சி இந்தியத் திரைப்பட நடிகை, வடிவழகியாக இருந்து பின்னர் நடிகையானவர். தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தித் திரைத்துறையில் தற்போது பணியாற்றி வருகிறார்.

பஞ்சாபிய சீக்கியக் குடும்பத்தில் பிறந்தவர், வடிவழகுத்துறையில் நுழையும் முன்னர் மென்பொருள் நிபுணராக பணியாற்றினார். 2010 இல் சும்மாண்டி நாதம் எனும் தெலுங்குத் திரைப்படம் மூலம் திரைத்துறையுள் நுழைந்தார்.

இவர் ஆடுகளம், வந்தான் வென்றான் போன்ற தமிழ்த் திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

தமிழ் சினிமாவில் தனுஷுடன் ஆடுகளம் படத்தில் நடித்தவர் டாப்சி. முதல் படத்திலே இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

இப்படத்தால் இவருக்கென்று ஒரு ரசிகர் பட்டாளம் உருவாகியது. அதுமட்டுமில்லாமல் தெலுங்கு மலையாளம் ஹிந்தி போன்ற மொழிகளின் படங்களிலும் நடித்து தனது ரசிகர் பட்டாளத்தை அமைத்துக் கொண்டார்.

Tapsee

மாடலாகவும் வலம் வந்து கொண்டியிருப்பவர் டாப்சி. சமீபத்தில் தனது ட்விட்டர் பக்கத்தில் ஆடைகள் குறைவாக ஆணிந்து ஒரு புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.

இதனை பார்த்த டாப்சியின் ரசிகர்களுக்கு கடும் அதிச்சியாகவே இருந்தது. அதுமட்டுமில்லாமல் அவரை விமர்சித்து வருகின்றனர்.

அதை பார்த்த ஒருவர், “இப்படி உடை அணிவதால் தான் ஆண்கள் பெண்களிடம் தவறாக நடக்கவேண்டும் என தோன்றும்” என ட்விட்டரில் கூறியுள்ளார்.

Tapsee

அதற்கு பதிலடி அளித்துள்ள டாப்ஸி “அப்படி என்றால் முதலில் அவர்கள் குரூர புத்தியை மாற்றவேண்டும், ஆடையை அல்ல” என கூறியுள்ளார்.

மேலும் காசுக்காக ஆடையை குறைத்து நடிப்பது பற்றி கேள்வி கேட்ட ஒருவருக்கு பதிலளித்த டாப்ஸி “உங்களை போன்ற கலாச்சார காவலர்களை கண்டுபிடிப்பது கொஞ்சம் கஷ்டம்” என விமர்சித்துள்ளார்.