சென்னை : நடிகர் சத்யராஜுக்கு ஆதரவாக டுவிட்டரில் #JusticeForSathyaraj என்ற ஹேஸ்டேக் ட்ரெண்டாகி வருகிறது.
காவிரி நீர் பிரச்னையில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை மதித்து தமிழகத்துக்கு தண்ணீர் திறக்காத கர்நாடக அரசை கண்டித்து நடிகர் சத்யராஜ் நிகழ்ச்சி ஒன்றில் பேசி இருந்தார்.தற்போது அந்த வீடியோ இணையத்தில் வைராகி வருகிறது. இதற்கு கர்நாடக மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

அதிகம் படித்தவை:  கமலின் தயாரிப்பில் கதாநாயகனாக அவதாரம் எடுத்த சத்யராஜ்

கர்நாடகத்தை அவமதித்த சத்யராஜ் நடித்துள்ள பாகுபலி 2 படத்தை திரையிட அனுமதிக்க மாட்டோம். அவர் தன் கருத்துக்கு மன்னிப்பு கேட்கும் வரை படத்தை வெளியிட தடை ஏற்படுத்துவோம் என்று கர்நாடகர்கள் கொந்தளிக்கின்றனர்.

“சத்யராஜ் கூறியது அவருடைய தனிப்பட்ட கருத்து என்றும் அதை அவர் 9 ஆண்டுகளுக்கு முன்பு தெரிவித்திருக்கிறார் . படத்தை தடை செய்வதால் அவருக்கு எந்த நஷ்டமும் இல்லை. படக்குழுவினருக்குத்தான் பெரிய இழப்பு ஏற்படும்” என்று அந்த படத்தின் இயக்குநர் ராஜமௌலி கருத்து தெரிவித்திருந்தார்.

அதிகம் படித்தவை:  அண்ணன் தம்பி கூட்டணியில் உருவாகும் புது படத்தின் பூஜை. போட்டோ உள்ளே.

இந்தநிலையில் தமிழர்கள் சத்யராஜுக்கு ஆதரவாக டுவிட்டரில் #JusticeForSathyaraj என்ற ஹேஸ்டேக் மூலம் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும் சத்ய ராஜ் மன்னிப்பு கேட்டக் கூடாது என்றும் தமிழக நெட்டிசங்கள் கருத்து தெரிவித்துவருகின்றனர்.