Connect with us
Cinemapettai

Cinemapettai

லாக் டவுனில் உலகளவில் ஹிட் அடித்த 3 வெப் சீரிஸும் அதன் விமர்சனமும்! இத்தனை ரகமா புது புது விதமா

India | இந்தியா

லாக் டவுனில் உலகளவில் ஹிட் அடித்த 3 வெப் சீரிஸும் அதன் விமர்சனமும்! இத்தனை ரகமா புது புது விதமா

கொரானாவில் தாக்கத்தால் உலகளவில் பலரும் பல மாதங்கள் வீட்டினுள்ளே முடங்கி கிடந்தனர். திரை அரங்குகள், பார்க், பீச் என எங்கும் செல்லாத மக்கள் வீட்டில் தங்கள் டிவி முன்பே உட்காரும் சூழல் ஏற்பட்டது. பலருக்கும் பொழுதை கழிக்க OTT தளங்கள் தான் கை கொடுத்து வருகின்றது.

நம் இந்தியாவில் கூட பல உள்ளூர் பிளாட்பார்ம் உருவாக்கி நல்ல ரீச் ஆகியுள்ளது. எனினும் டாப் என சொல்லும் பட்சத்தில் நெட் பிலிக்ஸ் மற்றும் அமேசான் ப்ரைம் தான் முடி சூட மன்னர்கள். அதிலும் வெப் சீரிஸ் என சிந்தித்தால் NET FLIX தான் டாப் டக்கர். பல வித ஜானர்கள், பல்வேறு மொழிகள் என கலக்குவதில் வல்லுநர்கள். நேர்த்தியான ஆங்கில சப் டைட்டிலுடன் தங்கு தடையின்று பார்த்து ரசிக்கலாம்.

இந்த 2020 இல் உலகளவில் ரசிகர்களின் கவனத்தையும், பிரட்டையும் பெற்ற வெப் சீரீசின் தொகுப்பே இந்த பதிவு. எனினும் டாப் மூன்றுமே நெட் பிலிக்ஸை சேர்ந்தது தான்.

DARK

ஜெர்மானிய சயின்ஸ் பிக்ஷன் திரில்லர் சீரிஸ். 2017 இல் ஆரம்பித்து மூன்றாவது சீசன் சமீபத்தில் 2020 இல் நிறைவடைந்தது. கற்பனையான ஜெர்மானிய நகரம் விண்டேன் தான் கதைக்களம். அங்கு குழந்தை ஒன்று காணமால் போக அதன் பின்னணியில் நான்கு குடும்பங்களின் வாழக்கையில் ஏற்படும் மாற்றம், ரகசியம் என செல்லும் கதை.

டயம் ட்ராவலில் இது புது ரகமான சீரிஸ். நேரத்தின் மாற்றங்கள் அது மனிதனின் இயல்பில் எவ்வாறு மாறுதல்களை உண்டு செய்கின்றது என இதில் நாம் காண முடியும். நடிப்பு, இசை, ஒளிப்பதிவு, கதை சொல்லும் விதம், நேரத்தின் மாற்றத்தை விவரிப்பது என பல ப்ளஸ் இருப்பதன் காரணத்தால் தான் இந்த சீரிஸ் ஹிட்.

DARK

முதல் சீசனில் பிரதானமாக 2019 , 1986 மற்றும் 1953 இல் நிகழும் சம்பவங்கள் தான். டணல், மெஷின் வழியாக 33 வருடங்கள் முன்னும் பின்னும் செல்ல முடியும் என்பதே கான்செப்ட். இரண்டாவது சீசனில் ஆடம் அவனின் செயல் பரதானப் படுத்தப்பட்டிருக்கும். மூன்றாவது சீசனில் ஏவாள் மற்றும் அவளது செயல்கள் தான் அதிகம்.

சீரிஸ் முடியும் தருவாயில் வெவ்வேறு பாரலல் உலகம் மற்றும் கதாபாத்திரங்களின் குணாதிசய மாற்றம் என பலவற்றை காமித்திருப்பர். யார் யாருக்கு என்ன உறவு முறை என்பதையே நாம் புரிந்துக்கொள்வது கடினமான ஒன்று தான்.

கடைசி சீசனில் லாஸ்ட் அத்தியாயம் வரை அந்த சஸ்பென்ஸை மெய்ண்டெய்ன் செய்தது தான் நம்மை பெரிதும் ஆச்சர்யப்பட வைத்தது. இந்த லாக் டவுன் சமயத்தில் உலகளவில் அதிக நபர்கள் பார்த்து ரசித்த சீரிஸ் இது தானாம்.

MONEY HIEST

அலெக்ஸ் பினா அவர்கள் உருவாக்கிய ஸ்பானிஷ் வெப் சீரிஸ். இரண்டு சீசன் உள்ள க்ரைம் சீரிஸ் ஆக திட்டமிடப்பட்டது. முதல் இரண்டு சீசனில் பணம் அச்சிடும் “ராயல் மிண்ட்டில்” நுழைந்து திருடுவதற்கு பதில் புது நோட்டுகளை அச்சிடும் டீம். அல்வரோ மார்ட்டெ ப்ரோபஸ்ஸர் கதாபாத்திரத்தில் கலக்கி இருப்பார். அவர் தான் மூளையாக செயல்படுவார்.

அவர் எவ்வாறு 8 டீம் உறுப்பினர்களை தேர்வு செய்கிறார், அவர்களுக்கு ஊர்களின் பெயரை வைப்பார். ஒரு ஒருவரின் பிளஸ், மைனஸ் என்ன என்றெல்லாம் அழகாக காமித்திருப்பர். இந்த சீரிஸ் தற்பொழுது நடக்கும் சம்பவத்தை காமிக்கும் அதே நேரத்தில் பிளாஷ் பேக் பகுதிக்கு செல்லும். எவ்வாறு பிரச்சனை ஏற்படும் அதை எவ்வாறு சமாளிப்பது என இவர்கள் எடுத்த ட்ரைன்னிங் காட்சிகள் வாயிலாக நமக்கு விவரிப்பார். 67 நபர்களை பணயக் கைதிகளாக வைத்து 11 நாட்களில் 2 . 4 பில்லியன் நோட்டுகள் அச்சடித்து எஸ்கேப் ஆவார்கள். கேஸை கவனித்த ஆபிசரை நம் ஹீரோ உஷார் செய்வது என கலக்கலாக இருக்கும்.

Money Heist

இரண்டு சீஸனின் வெற்றிக்கு பின் மூன்றாவது மட்டும் நான்காவது சீசன் 2019 மற்றும் 2020 இல் ஒளிபரப்பானது. கடைசி ஐந்தாவது சீசன் அடுத்தாண்டு ரீலிஸ் ஆகிறது.

இதில் பெர்லின் அவர்களின் திட்டத்தை செயல்படுத்துகிறார் ப்ரோபஸ்ஸர். தங்கத்தை உருகுவது இம்முறை திட்டம். அதில் அவர்கள் சந்திக்கும் பிரச்சனை, கருத்து வேறுபாடு என நிதானமாக செல்லும்.

நான்காவது சீஸனின் முடிவில் ஹீரோ போலீசிடம் சிக்க, எவ்வாறு அவர் தப்பிப்பர், அவரின் உந்துதல் இன்றி டீம் திருட்டை சக்ஸஸ் செய்யவர்களா என்பதனை பார்க்க உலகெங்கிலும் ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.

நைரோபி, டோக்கியோ, பெல்லா ஷியோ பாடல் என பல அசத்தல் விஷயங்கள் உள்ளது இந்த தொடரில். ஆங்கிலம் இல்லாத வெப் சீரிஸில் அதிகம் பார்க்கப்பட்ட தொடர் என்ற பெருமையை 2018 வரை தக்கவைத்து.

FAUDA

இஸ்ரேலிய வெப் சீரிஸ். 2015 இல் முதல் சீசன் வெளியானது. அரபிக் மற்றும் ஹெப்ரு மொழி சீரிஸ் இது. இஸ்ரேலிய அண்டர் கவர் யூனிட்டுக்கு பாலஸ்தீனிய தீவிரவாதிகளுக்கும் இடையே நடக்கும் போராட்டமே இது.

FAUDA

லாக் டவுன் நேரத்தில் ட்ரைலர் பிடித்து போக மூன்றாவது சீசனை தான் பலர் முதலில் பார்த்துள்ளனர். அது பிடித்து போகவே முதல் இரண்டு சீசனையும் பார்த்துவிட்டனர். ஆங்கிலம் துளியும் கிடையாது, சர்வதேச நட்சத்திர ரசிகர்கள், டெக்கனிகள் ஆட்கள் இல்லை, எனினும் நம்பகத்தன்மை மற்றும் ஆக்ஷன் , எமோஷனல் காட்சிகள் தான் இது ஹிட் அடிக்க காரணம். தீவரவாதியின் குடும்ப சூழல், அவர்களின் மனநிலை போன்றவற்றை தத்ரூபமாக காமித்துள்ளனர்.

FAUDA என்ற அரேபிய வார்த்தைக்கு பெருங்குழப்பம் என்பது பொருள். இதனை உருவாக்கியது இருவர். லயோர் என்பவர் இஸ்ரேலிய படையில் ஏஜெண்டாக இருந்தவர், மற்றவர் ஏவி பத்திரிகை வட்டத்தில் பணி புரிந்தவர். இந்த இருவரின் கை வண்ணமே இந்த சீரிஸ்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
To Top