Tamil Cinema News | சினிமா செய்திகள்
மீண்டும் குடும்பத்தை கெடுக்க ரெடியான சீரியல்கள்.. தேதியுடன் அறிவித்த பிரபல சேனல்கள்!
கொரானா வந்ததில் ஒரே ஒரு நல்லது என்னவென்றால் பல பெண்கள் சீரியல்களை பார்ப்பதை கைவிட்டனர். சீரியல் படப்பிடிப்புகள் நடத்தமுடியாமல் போனதால் தொடர்ந்து வேறு வழியில்லாமல் போட்ட படங்களையே திரும்ப திரும்ப போட்டு பொழப்பை ஒட்டிக் கொண்டிருந்தது சேனல்கள்.
இந்நிலையில் மீண்டும் தடைபட்ட சீரியல்கள் எல்லாம் தொடங்கப் போவதாக பிரபல டிவி நிறுவனங்கள் அறிவித்ததால் பல குடும்பத் தலைவர்கள் என்ன செய்வது என்றே தெரியாமல் புலம்புகிறார்கள்.
கொரானா ஊரடங்கு அறிவித்ததிலிருந்து யாரும் எந்த வேலைக்கும் செல்ல முடியாமல் தடுமாறி வந்தனர். அதேபோல் சினிமா மற்றும் சின்னத்திரை சார்ந்த அனைத்து படப்பிடிப்புகளும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தன.
இந்நிலையில் மீண்டும் சின்னத்திரை படப்பிடிப்புகளுக்கு மட்டும் அனுமதி அளித்துள்ளது அரசு. இதனை பயன்படுத்திக் கொண்டு மீண்டும் தங்களது சீரியல்களை ஆரம்பித்துவிட்டனர் பிரபல டிவி சேனலில் நிறுவனங்கள்.
சன் டிவி மற்றும் ஜீ தமிழ் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் தான் பெரும்பாலும் இல்லத்தரசிகளை கவர்ந்து வருகின்றன. விஜய் டிவியும் இதில் கொஞ்சமும் சளைத்தது அல்ல. இருந்தாலும் சன் டிவி மற்றும் ஜீ தமிழ் நேயர்களுக்கு சீரியல் கொஞ்சம் ஸ்பெஷல் தான்.
இந்நிலையில் ஜூலை 27-ஆம் தேதி முதல் மீண்டும் தங்களது சேனல்களில் சீரியல்கள் தொடர்ந்து ஒளிபரப்பப்படும் என அதிகாரபூர்வமாக தங்களது ட்விட்டர் பக்கங்களில் அறிவித்துள்ளனர்.
