fbpx
Connect with us

Cinemapettai

தமிழ் சினிமாவை திரும்பி பார்க்க வைத்த படங்கள்.. அதிர வைக்கும் லிஸ்ட்

Tamil Cinema News | சினிமா செய்திகள்

தமிழ் சினிமாவை திரும்பி பார்க்க வைத்த படங்கள்.. அதிர வைக்கும் லிஸ்ட்

தமிழ் சினிமாவில் வருடத்திற்கு 200 முதல் 300 படங்கள் திரைக்கு வருகின்றன. அதில் அனைத்து படங்களுமே வெற்றி பெற்று விட்டது என்று சொல்ல முடியாது. பெரிய நடிகர்களின் படங்களை தவிர மற்ற படங்களில் 10 முதல் 15 படங்கள் தான் வெற்றி என்று சொல்ல முடியும். பெரிய நடிகர்களின் படங்களும் வருடத்திற்கு கணக்கு போட்டால் நான்கைந்து கூட தேறாது. அப்படிப்பட்ட தமிழ்சினிமாவில் கதைக் களத்தில் மிரட்டிவிட்ட திரைப்படங்கள் என்று சொல்லக்கூடிய அளவுக்கு சில படங்கள் வந்துள்ளன. அவற்றில் சில படங்களைப் பற்றி இங்கு காணலாம்.

அருண் விஜய் நடிப்பில் மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவான படம் தடையறத் தாக்க. கதைக் களத்தில் அப்படி ஒரு தெளிவு கொண்ட திரைப்படம். அருண் விஜய்யை ரசிகர்கள் நடிகராக ஏற்றுக்கொள்ள வைத்த படம். இதே கூட்டணியில் தடம் என்ற படமும் வந்தது. இந்தப் படமும் கதை களத்தில் தொய்வில்லாமல் சீராக பல திருப்பங்களுடன் இருந்ததால் வெற்றியைப் பெற்றது.

ஜிகர்தண்டா என்ற படத்தில் சித்தார்த் தவிர வேறு எந்த முகமும் அவ்வளவு பரிச்சயமில்லை. சித்தார்த்தை விட வில்லனாக நடித்த பாபி சிம்ஹாவுக்கு தேசிய விருது கிடைத்தது குறிப்பிடத்தக்கது. உண்மையான ரவுடியின் வாழ்க்கையை இதற்கு முன் இப்படி யாருமே படம் எடுத்தது கிடையாது.

சதுரங்க வேட்டை, இப்படியெல்லாம் கூட திரைக்கதை அமைக்க முடியுமா என பல பேரை யோசிக்க வைத்து திரைப்படம். எச் வினோத் என்ற முத்தை தமிழ் சினிமா கண்டெடுக்க காரணம். இதே வினோத் இயக்கத்தில் கார்த்தி நடித்த தீரன் அதிகாரம் ஒன்று படத்தை அவ்வளவு எளிதில் யாரும் மறந்துவிட முடியாது. வழக்கமான போலீஸ் ரவுடி என்று இல்லாமல் கதையில் கவனம் செலுத்தியதால் இந்தப் படம் பெரிய வெற்றியைப் பெற்றது.

ஆரண்ய காண்டம், எந்தவித ஆர்ப்பாட்டமும் இல்லாமல் அமைதியாக வந்து தமிழ் சினிமாவையே திருப்பி போட்ட திரைப்படம். தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் வெளிவந்த சூப்பர் டீலக்ஸ் படமும் உலக அளவில் புகழ் பெற்றது அனைவரும் அறிந்ததே.

விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான படம் ராட்சசன். என்னதான் சைக்கோ த்ரில்லர் படங்கள் வந்தாலும் ராட்சசன் படம் தமிழ் சினிமாவில் ஒரு மைல்கல் தான். துருவங்கள் பதினாறு படம் ஒரு சின்ன பையன் உருவாக்கியதை போல் இல்லாமல் திரைக்கதையில் அவ்வளவு ஒரு நேர்த்தி.

மாதவன், நீது சந்திரா நடிப்பில் வெளியான திரைப்படம் யாவரும் நலம். ஒரு சீரியலை அடிப்படையாகக் கொண்டு திரைக்கதையை மிக அற்புதமாக அமைத்து பார்வையாளர்களை நுனிசீட்டில் அமர்ந்து படம் பார்க்க வைத்த பெருமை இயக்குனர் விக்ரம் குமாருக்கு தான் சேரும். வெற்றிமாறனின் விசாரணை யாராலும் மறக்கமுடியாத உன்னதமான படம். ஆயிரம் அசுரன் வந்தாலும் விசாரணைக்கு உள்ள மரியாதையே வேறு.

டிமான்டி காலனி மற்ற பேய் படங்களிலிருந்து சற்று வித்தியாசமான அதேசமயம் நேர்த்தியான திரைக்கதை கொண்ட படம். விக்ரம் வேதா, வேற லெவல் பரிமாணத்துடன் வெளிவந்த படம். மற்ற மொழி இயக்குனர்களை வாயை பிளக்க வைத்த புஷ்கர் காயத்திரிக்கு ஒரு சல்யூட்.

இந்த லிஸ்டில் உங்களுக்கு பரிச்சயமான படங்களை தவிர மற்ற படங்கள் ஏதேனும் பிடித்திருந்தால் கூறலாம்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top