போங்கயா நீங்களும் உங்க தியேட்டரும்.. மீண்டும் OTTக்கு சென்ற முக்கிய படங்கள்

கடந்த வருடம் யாரும் எதிர்பார்க்காத வகையில் கொரானா தொற்று வந்து இந்திய சினிமாவையே அழித்துவிட்டது. அதுமட்டுமில்லாமல் தியேட்டர் தொழில்கள் முழுவதும் முடங்கிய சூழ்நிலை ஏற்பட்டது.

அதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக தற்போது தான் மீண்டு வருகின்றன. அந்த வகையில் தமிழில் மாஸ்டர் மற்றும் சுல்தான் போன்ற படங்கள் வெளியாகி தியேட்டர்காரர்களுக்கு சந்தோசத்தை கொடுத்த நிலையில் தற்போது உச்ச கட்ட எதிர்பார்ப்பில் கர்ணன் படம் வெளியாகியுள்ளது.

தனுஷ் நடிப்பில் வெளிவந்த கர்ணன் படம் பாசிட்டிவ் விமர்சனங்களை குவித்து வரும் நிலையில் திடீரென மீண்டும் கொரானா பரவல் காரணமாக திரையரங்குகளில் 50 சதவீத பார்வையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும் என்ற உத்தரவை மீண்டும் பிறப்பித்தனர்.

இதனால் கர்ணன் படத்தின் வசூலில் பாதிப்பு ஏற்படும் என தெரிகிறது. மேலும் நாளுக்கு நாள் கொரானாவின் தாக்கம் அதிகமாகி கொண்டே வருவதால் கண்டிப்பாக இன்னும் சில மாதங்களுக்கு புதிய படங்களை வெளியிட முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக தியேட்டரில் வெளியாக இருந்த சிவகார்த்திகேயனின் டாக்டர், சிம்புவின் மாநாடு போன்ற புதிய படங்கள் அனைத்துமே தற்போது ஒடிடி ரிலீஸில் வெளியாவதற்கு அதிக வாய்ப்புகள் உருவாகி உள்ளதாம். இது தவிர மேலும் சில பெரிய படங்களும் நேரடி ஓடிடி ரிலீசுக்கு வருவதாகவும் செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

doctor-cinemapettai
doctor-cinemapettai

தற்போது தான் தியேட்டர் உரிமையாளர்கள் கொஞ்சம் கொஞ்சமாக ரசிகர்களை தியேட்டர் பக்கம் இழுத்து வந்த நிலையில் மீண்டும் பூட்டு போட வேண்டிய சூழ்நிலை உருவாகும் பட்சத்தில் தலையில் துண்டு தான் என கவலையில் உள்ளார்கள் தியேட்டர் உரிமையாளர்கள்.

Advertisement Amazon Prime Banner