Tamil Cinema News | சினிமா செய்திகள்
காலா படத்தை பார்க்க டாப் காரணங்கள் இதோ…
காலா படத்தை பார்க்க காரணங்கள்:
ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி இருக்கும் காலா படம் சமூக வலைத்தளங்களில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. ரஜினியின் அக்மார்க் வசனமான துண்டு ஒருமுறை தான் தவறும் என்பதை காலா மூலம் பா.ரஞ்சித் நிரூபித்து விட்டார். என்னப்பா நீங்க இன்னுமா படம் பார்க்கல? அப்போ இத படிங்க முத!
எப்போதும் ரஜினி படம் என்றாலே ரசிகர்களுக்கு ஒரு துள்ளல் இருக்கும். சின்ன குழந்தை முதல் முதியவர் வரை ரஜினியின் ஸ்டைலுக்கு மயங்காதவர்களே இல்லை. அப்படி ஒரு அக்மார்க் ரஜினி படம் தான் இது.
பா.ரஞ்சித் இதுவரை இரண்டு படங்கள் மட்டுமே இயக்கி இருக்கிறார். இரண்டுமே ரசிகர்களிடம் செம ஹிட் அடித்தது. அவரின் மூன்றாவது படமே ரஜினியுடன் அமைந்தது. அப்படத்தில் வித்தியாசமாக ரஜினியை காட்டி இருந்தாலும், கபாலி படம் ரசிகர்கள் எதிர்பார்த்தது போல இல்லை. இருந்தும் தொடர்ந்து இரண்டாவது வாய்ப்பை கொடுத்த ரஜினிகாந்தை கண்டிப்பாக பா.ரஞ்சித் ஏமாற்றமாட்டார் என நம்பலாம்.
தமிழ் சினிமாவில் சில தயாரிப்பு நிறுவனங்களின் படத்தை பார்க்க நம்பிக்கையுடன் செல்லலாம். அந்த பெயரை தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது. ரஜினிக்காக மட்டுமே தனுஷ் சில சோதனை முயற்சிகளை எல்லாம் எடுக்க மாட்டார் என்பதால், படம் தரமானதாகவே இருக்கும் என்கிறார் ரசிகர்கள்.
கோலிவுட்டில் எதிர்ப்புகளை சந்திக்கும் படத்திற்கு சாதாரணமாகவே அதிக வரவேற்பு இருக்கும். எதுக்குப்பா இந்த படத்துக்கு இத்தனை எதிர்ப்பு இருக்கு என தெரிந்து கொள்ளவே திரையரங்கத்துக்கு படை எடுக்கும் ரசிகர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். இந்த லாஜிக் தான் விஜய் நடிப்பில் தேசிய அளவில் மெர்சல் திரைப்படத்துக்கு செம ஹிட் கொடுத்தது. இந்த எதிர்ப்பின் காரணம் புரிய நீங்கள் கண்டிப்பாக இப்படத்தை பார்க்க வேண்டும்.
சந்தோஷ் நாராயணன் இசை படத்திற்கு ஏகப்பட்ட பிளஸ்களை அள்ளித் தருகிறது. ஒரு பாடல் இல்லை படத்தின் எல்லா பாடல்களுமே சூப்பர் ஹிட்டாக அமைந்து இருக்கிறது. எனவே சந்தோஷ் நாராயணனின் இசைக்காகவே படம் பார்க்க நீங்கள் தாராளமாக செல்லலாம்.
எல்லா படத்திலும் ரஜினி மட்டுமே முன்னணியாக காட்சிப்படுத்தப்பட்டு இருப்பார். இதிலும் அதே போல் இருந்தாலும், அவருக்கு இடையே தங்களையும் சில நட்சத்திரங்கள் பார்க்க வைக்க தவறவில்லை. ரஜினி மனைவியாக நடித்திருக்கும் ஈஸ்வரி ராவ், அரசியல்வாதியாக நடித்துள்ள நானா படேகர், ரஜினி வீட்டில் இருக்கும் சமுத்திரக்கனி, ரஜினியின் காதலி ஹீமா குரோஷி என படத்தில் அப்ளாஸ் வாங்குவது கண்டிப்பாக ரஜினி மட்டும் இல்லை.
பெரும்பாலும், ரஜினியின் வெற்றி படங்களில் கேங்ஸ்டர் கதாபாத்திரத்தை முன்னணியாக வைத்து எடுக்கப்பட்டு இருக்கும் படங்களே அதிகமாக இருக்கும். ரங்கா, பில்லா, தளபதி, பாட்ஷா, கபாலி என ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற படங்கள் ஏராளம். கண்டிப்பாக காலாவும் ஒரு இடம் பிடிக்கும் என்பதால் தாராளமாக நீங்கள் படத்தை பார்க்கலாம்.
