Tamil Cinema News | சினிமா செய்திகள்
இந்திய அளவில் கமல், விஜய் சேதுபதியை பின்னுக்கு தள்ளிய விஷ்ணு விஷால்.. அடேங்கப்பா என ஷாக்கான ரசிகர்கள்
இந்திய அளவில் பிரபலமான ஆங்கில பத்திரிகை ஒன்று மிக சிறந்த படங்களை வரிசைப்படுத்தி உள்ளது. அதில் 2018ல் விஷ்ணு விஷால், அமலாபால் நடிப்பில் வெளிவந்த ராட்சசன் படம் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது.
சைக்கோ கொலைகாரன், சஸ்பென்ஸ் கலந்த திரில்லராக கதைக்களத்தை அமைத்து ரசிகர் மத்தியில் மாபெரும் வெற்றி பெற்ற படம். இந்த படம் விஷ்ணு விஷாலின் சினிமா வாழ்க்கையை புரட்டிப் போட்டது என்றே கூறலாம்.
கிட்டத்தட்ட 10 ஹீரோக்களுக்கும் மேல் வேண்டாம் என ஒதுக்கிய கதையில் திறமையாக நடித்து இருப்பார் விஷ்ணு விஷால். இந்திய சினிமாவை திரும்பி பார்க்க வைத்த படமாகப் பார்க்கப்படுகிறது.
இதற்குப் பின்னர்தான் நான்காவது இடத்தில் விக்ரம் வேதா, ஐந்தாமிடத்தில் நாயகன், ஆறாவது இடத்தில் அன்பே சிவம் போன்ற படங்கள் இடம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதனால் கமலஹாசனை தாண்டி விஷ்ணு விஷால் ராட்சசன் படத்தின் மூலம் வெற்றி பெற்று முன்னிலையில் உள்ளார். கல்யாண வாழ்க்கையில் தோற்று போனாலும் சினிமாவில் சாதித்து விட்டார் என்று ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
இந்த வருடம் ஜெகஜாலக்கில்லாடி, மோகன்தாஸ், F.I.R போன்ற படங்களில் நடித்து வருகிறார். ராட்சசன் 2 படத்தில் விரைவில் நடிக்க உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
