11ஆம் வகுப்பு பாடத்திட்டத்தில் இந்த வருட பொது தமிழ் பாடத்தில் இசைஞானி இளையராஜா மற்றும் ஏ.ஆர்.ரஹ்மான் குறித்த பாடங்கள் இடம்பெற்று இருக்கிறது.

பெரும்பாலும், தமிழக பாடத்திட்டத்தில் கவிஞர்கள் பாடங்களே அதிகமாக இடம்பெற்று இருக்கும். சாதனையாளரில் சச்சின் டெண்டுல்கர் குறித்த ஆங்கில பாடம் தான் மாணவர்களிடையே பிரபலமாக இருந்தது. அட அந்த கட்டுரையை மனப்பாடம் பண்ணிட்டா பாஸ் ஆகிடுவோம் என்ற ரீதியில் அனைத்து மாணவர்களும் இன்றும் படித்து கொண்டு தான் இருக்கிறார்கள்.

இந்நிலையில், தமிழக கல்வி துறை கடந்த 13ஆண்டுகளாக பாடத்திட்டத்தில் மாற்றம் செய்யப்படவில்லை. இதை தொடர்ந்து, இந்த கல்வியாண்டு முதல் புது பாடத்திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கிறது. முதற்கட்டமாக, வரும் கல்வியாண்டில் 1, 6, 9 மற்றும் 11ம் வகுப்புகளுக்கு மட்டும் பாடத்திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கிறது. இதில், 11 ஆம் வகுப்பு பாடத்தில் கோலிவுட்டின் தூண்களான ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் இளையராஜா குறித்த பாடங்கள் இருக்கிறது.

அதிகம் படித்தவை:  இளையராஜாவுக்கு விமானத்தில் செல்ல அனுமதி மறுப்பு - அதிர்ச்சியில் ரசிகர்கள்

பல ஆண்டு காலமாக கோலிவுட்டில் பிரபல இசையமைப்பாளராக இருந்து வருபவர் இசைஞானி இளையராஜா. பல பாடல்கள் இசையமைப்பு செய்திருந்தால் கூட ஒரு மெட்டுக்கும் இன்னொரு மெட்டுக்கும் ஆயிரம் வித்தியாசங்கள் இருக்கும். லண்டன் ராயல் ஃபில்ஹார்மானிக் ஆர்க்கெஸ்ட்ராவில் சிம்பொனிக்கு இசையமைத்து ஆசிய கண்டத்தின் முதல் இசையமைப்பாளர் என்ற பெருஞ்சிறப்பை 1993 ஆம் ஆண்டு பெற்றார்.

அதிகம் படித்தவை:  ‘இளையராஜா ஆயிரம்’ நிகழ்ச்சியில் ரசிகர்களை ஆச்சர்யத்தில் உறையவைத்த கமல்

இதனை கருத்தில் கொண்டு ‘சிம்பொனி தமிழர்’ என்ற பெயரில் இளையராஜாவை குறித்த பாடம் இடம்பெற்றுள்ளது. கோலிவுட்டில் இருந்து ஆஸ்கர் விருதை தட்டிய முதல் தமிழர் ஏ.ஆர்.ரஹ்மான். இன்றும் அவர் மேடையில் எல்லா புகழும் இறைவனுக்கே எனக் கூறிய வார்த்தைக்கள் பலருக்கு சங்கீதமாகவே மாறிவிட்டது. இதனால், அவர் குறித்த பாடம் ‘ஆஸ்கர் தமிழர்’ என்ற பெயரில் இடம் பெற்றுள்ளன. என்னா மக்கா ரெடியா?