அதிக திரையரங்கில் திரையிடப்படும் டாப் திரைப்படங்கள்.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!

கொரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக பல்வேறு துறைகள் கடும் இழப்பை சந்தித்துள்ள நிலையில், திரைப்படத் துறையும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது மீட்பு பாதையில் சென்று கொண்டிருக்கும் திரைத்துறைக்கு தமிழக அரசு 50 சதவீத பார்வையாளர்களுடன் தியேட்டர்கள் செயல்படலாம் என்ற தளர்வை அறிவித்திருந்தது கூடுதல் வலு சேர்த்துள்ளது.

இந்நிலையில் தற்போது திறக்கப்படும் திரையரங்குகளில் திரைக்கு தயாராக உள்ள 40 திரைப்படங்கள் வரிசையாக திரையிடப்பட உள்ளது. அதிலும் குறிப்பாக ரசிகர்கள் நீண்ட நாட்களாக காத்திருக்கும் திரைப்படங்களில் டாப் 5 பட்டியல் வெளியாகி உள்ளது.

டாக்டர்                                                                                                                                                                                                                                நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் திரைப்படம் தான் ‘டாக்டர்’ திரைப்படமானது, கடந்த மார்ச் மாதமே வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தமிழ்நாட்டின் தேர்தல் காரணமாக தயாரிப்பாளர்கள் படத்தை தள்ளி வைத்துவிட்டதால் டாக்டர் திரைப்படம் வெளியாக தாமதம் ஆகியுள்ளது. அதன்பின்பு ஓடிடி தளத்தில் வெளியிட வேண்டாம் என்ற முடிவில் உறுதியாக இருந்த படக்குழு, தற்போது திரையரங்குகள் திறக்கப்பட்டுள்ளதால் விரைவில் ரிலீஸ் செய்யும் தேதியை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

doctor-cinemapettai
doctor-cinemapettai

பஹீரா                                                                                                                                                                                                                                          திரிஷா இல்லன்னா நயன்தாரா. அன்பானவன் அசராதவன் அடங்காதவன் ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் முதல் முதலாக பிரபு தேவாவை வைத்து, சைக்கலாஜிக்கல் திரில்லர் படமாக பஹீரா படத்தை உருவாக்கியுள்ளார். இந்தப் படத்தின் ட்ரெய்லர் அண்மையில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து, படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்தது. இந்தப் படம் கடந்த மே மாதத்திலேயே வெளியாகும் என்று எதிர்பார்த்த நிலையில் பல மாதங்கள் தாமதமானது. பஹீரா படத்தில் அமிரா தஸ்தூர், சாக்ஷி அகர்வால், ஜனனி ஐயர் மற்றும் கோபிநாத் ரவி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர், மேலும் கணேசன் சேகர் இசையமைத்துள்ளார்.

bagheera-cinemapettai
bagheera-cinemapettai

பார்டர்                                                                                                                                                                                                                                          நடிகர் அருண் விஜய் மற்றும் இயக்குனர் அறிவழகன் கூட்டணி ‘குற்றம் 23’ படத்திற்கு பிறகு, தற்போது பார்டர் படத்தில் இணைந்துள்ளது. இந்தப் படம் ஒரு ஸ்பை ஆக்ஷன் த்ரில்லர் திரைப்படமாகும். ரெஜினா கசாண்ட்ரா மற்றும் ஸ்டெஃபி பட்டேல் ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கிறார்கள். தேசபக்தியை வெளிப்படுத்தும் பார்டர் திரைப்படத்தை கடந்த ஆகஸ்ட் 15 அன்று திரையிடப்படும் என்று எதிர்பார்த்திருந்த நிலையில், விரைவில் வெளியாகும் என்று படக்குழு தெரிவித்துள்ளது.

arunvijay-borrder-movie-photo
arunvijay-borrder-movie-photo

லாபம்                                                                                                                                                                                                                                     மறைந்த இயக்குனர் எஸ்பி ஜனநாதனின் கடைசி படம். மாரடைப்பு காரணமாக அவர் இறப்பதற்கு முன்பே இயக்குனர் 90% பட வேலைகளை முடித்துள்ளார். அவரது உதவியாளர்கள் படத்தை வெளியிடுவதற்கு உருவாக்கியுள்ளனர். விஜய் சேதுபதி மற்றும் ஸ்ருதிஹாசன் நடித்த இந்தப் படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.

laabam-cinemapettai
laabam-cinemapettai

லிஃப்ட்                                                                                                                                                                                                                                          விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி என்ற தொடரில் ரசிகர்களிடையே கவனம் பெற்று அதன் பின்பு, பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்த கவின் ‘லிஃப்ட்’ படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். கதாநாயகியாக அம்ரிதா ஐயர் நடித்துள்ளார். இந்த படத்தை வினித் வரப்பிரசாத் ஆகியுள்ளார். லிஃப்ட் படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிந்துள்ள நிலையில் விரைவில் வெளியீட்டுக்கு தயாராகியுள்ளது.

kavin-amritha-lift-movie
kavin-amritha-lift-movie

 

Sharing Is Caring:

சமீபத்திய சினிமா செய்திகள்