Connect with us
Cinemapettai

Cinemapettai

Sports | விளையாட்டு

சமூக வலைத்தளத்தில் டாப்பாக இருக்கும் ஐபிஎல் அணி எது தெரியுமா? சிஎஸ்கே இல்லை

ஐபிஎல் இந்தியாவில் மட்டுமல்லாமல் உலகளவில் பெரும் புகழை பெற்று இருக்கிறது. அதிலும், பலருக்கு ஐபிஎல் போட்டிகள் தான் சம்மர் விடுமுறை கொண்டாட்டமாகவே மாறி விட்டது. இந்த நடப்பு தொடரும் பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் தான் சென்று கொண்டு இருக்கிறது. கப்பை அடிக்க வேண்டும் என ஒவ்வொரு அணி வெறிக்கொண்டு உழைத்து கொண்டு தான் இருக்கிறார்கள். இவர்களை போல இந்த அணிகளின் சமூக வலைத்தள பக்கங்களும் செம ஆக்டிவ் மோடில் தான் வலம் வருகிறது.

ஒவ்வொரு ட்வீட்டிலும் ரசிகர்களை கவர வேண்டும் என்பதை எல்லா அணிகளும் தெளிவாக கையில் எடுத்திருக்கின்றன. சரி, சமூக வலைத்தள பக்கங்கள் மூலம் அனைவரையும் கவர்ந்து டாப் பொஷிசன்களில் இருக்கும் அணியின் வரிசையை தெரிந்து தான் கொள்ளுங்களேன்.

கடைசி இடத்தை பிடித்த அந்த 8 வது அணி, ராஜஸ்தான் ராயல்ஸ். சென்னை அணி போல இரண்டு வருட தடைக்கு பிறகு ரீ எண்ட்ரி வந்தாலும் அவர்களுக்கு இருக்கும் கிரேஸ் இவர்களுக்கு இல்லை என்று தான் கூறவேண்டும். டுவிட்டரில் 1.04 மில்லியன் பாலோயர்களையும், பேஸ்புக்கில் 4.22 ரசிகர்களையும், இன்ஸ்டாகிராமில் 0.31 மில்லியன் பாலோயர்களையும் மட்டுமே கொண்டு இருக்கிறது.

7வது இடம் டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கு தான். அதிரடி வீரர்கள் இருந்தாலும், பாப்புலரான முகங்களை கொள்ளாததால் இந்த அணிக்கு டெல்லி ரசிகர்கள் மட்டுமே அதிகம். கௌதம் கம்பீரும் டெல்லி கேப்டனாக இல்லாததால் இந்த அணிக்கு சற்று பின்னடைவு தான். டுவிட்டரில் 1.28 மில்லியன் பாலோயர்களையும், பேஸ்புக்கில் 4.60 ரசிகர்களையும், இன்ஸ்டாகிராமில் 0.44 மில்லியன் பாலோயர்களையும் கொண்டு இருக்கிறது.

சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு தான் 6வது இடம். இதிலும் டெல்லியை போல பிரபல முகங்கள் மிஸ்ஸிங். எல்லா அணிக்கும் இந்திய கேப்டன்கள் என்றால் இதில் மட்டுமே வெளிநாட்டு வீரர் கேப்டனாக இருக்கிறார். ஆனால் மற்ற அணிகளை விட இந்த அணி பவுலிங்கில் கில்லி என்பதில் சந்தேகமே இல்லை. இன்ஸ்டாகிராமில் 0.58 மில்லியன் பாலோயர்களையும், டுவிட்டரில் 1.98 மில்லியன் பாலோயர்களையும், பேஸ்புக்கில் 5.91 ரசிகர்களையும் கொண்டு இருக்கிறது.

அடுத்த இடத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி இருக்கிறது. கடந்த வருடங்களில் சரியாக சோபிக்காத அணி என்ற அடையாளத்துடன் இருந்த பஞ்சாப்பிற்கு இந்த வருடத்தின் லக் தமிழர் அஸ்வின் தான். ஒவ்வொரு போட்டியையும் குரு தோனியின் வழியிலே தலைமை தாங்குவது அணிக்கு கூடுதல் கிரேஸ். அஸ்வினுக்காகவே இந்த அணிக்கு இந்த வருடம் செம வைரல் ஹிட்கள் கிடைத்து வருகிறது. அதன்படி, இன்ஸ்டாகிராமில் 0.70 மில்லியன் பாலோயர்களையும், டுவிட்டரில் 1.98 பில்லியன் பாலோயர்களையும், பேஸ்புக்கில் 5.91 ரசிகர்களையும் கொண்டு இருக்கிறது.

4வது இடத்தில் ஆக்ரோஷ மன்னன் விராட் கோலியின் ராயல் சேலஞர்ஸ் அணி. எல்லா வருட ஐபிஎல்லிலும் இவர்கள் ஆட்டம் படு பயங்கரமாகவே இருக்கும். வெற்றி நுனி வரை சென்று விட்டு தோல்வி அடைவது தான் இவர்களுக்கு இன்று வரை துரதிஷ்டவசம். இந்த வருடமும் சரியான ஒப்பனிங்கை தொடங்காத பெங்களூருக்கு உலகளவில் ரசிகர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். இவர்களின் டுவிட்டரில் 3.25 மில்லியன் பாலோயர்கள், இன்ஸ்டாகிராமில் 1.70 மில்லியன் பாலோயர்கள், தொடர்ந்து, பேஸ்புக்கில் 9.47 மில்லியன் பாலோயர்கள் என ஹை பீக்கில் இருக்கிறது ஆர்சிபி.

தல தோனியின் தலைமையில் மாஸ் கம்பேக் கொடுத்த சென்னை அணிக்கு தான் 3வது இடம். டுவிட்டரில் 4.35 மில்லியன் பாலோயர்கள், இன்ஸ்டாகிராமில் 0.97 மில்லியன் பாலோயர்கள், தொடர்ந்து, பேஸ்புக்கில் 12.31 மில்லியன் என போட்டியினை போலவே அணியின் ரசிகர்கள் கூட்டம் மலை போல அதிகரித்து கொண்டு தான் இருக்கிறது. மற்ற அணிகளுக்கு ஒரே ஸ்டாரால் பேமஸ் என்றால் சிஎஸ்கேவில் இருக்கும் ஒவ்வொரு வீரரும் ஸ்டார் ப்ளேயர் தான்.

நடப்பு தொடரில் தடுமாறி வரும் கடந்த வருடம் சாம்பியன் மும்பை இந்தியன்ஸுக்கு தான் 2வது இடம். சச்சின் அணி என்ற அங்கீகாரத்தை இன்னும் தக்க வைத்து இருக்கிறது. பல வெற்றிகளை குவித்த இந்த அணிக்கு இந்த வருட தொடக்கம் சரி இல்லை என்று தான் கூற வேண்டும். மும்பை மட்டுமல்லாமல் பல ரசிகர்கள் மும்பை இந்தியன்ஸுக்கு உண்டு என்பதால் டுவிட்டரில் 4.94 மில்லியன் பாலோயர்கள், இன்ஸ்டாகிராமில் 1.80 மில்லியன் பாலோயர்கள், தொடர்ந்து, பேஸ்புக்கில் 13.30 லைக்ஸ்கள் என இன்னும் மாஸ் அணியாகவே இருக்கிறது.

அப்போ, யாருக்கு தான் முதலிடம்… ஆச்சரியத்திலும் ஆச்சரியம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தான் முதலிடத்தில் இருக்கிறது. சாருக்கானின் அணி என்பதால் ஸ்டார் அந்தஸ்து இந்த அணிக்கு இருக்கத்தான் செய்கிறது. தொடர்ந்து, இந்த வருடம் அணியின் தலைமையை ஏற்று இருப்பது தமிழக வீரரான தினேஷ் கார்த்திக். நடுநிலையாகவே இருக்கும் இவ்வணிக்கு சமூக வலைத்தளத்தில் மட்டும் கிளாஸ் வரவேற்பு. டுவிட்டரில் 3.94 மில்லியன் பாலோயர்கள், இன்ஸ்டாகிராமில் 0.68 மில்லியன் பாலோயர்கள், தொடர்ந்து, பேஸ்புக்கில் 16.62 மில்லியன் லைக்ஸ்கள் கொண்டுள்ளன.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top