சனிக்கிழமை, டிசம்பர் 14, 2024

துப்பாக்கியில் கவனம் செலுத்தும் டாப் ஹீரோக்கள்.. விஜய் போட்ட விதையா.?

Vijay : விஜய் கோட் படத்தை தொடர்ந்து இப்போது தளபதி 69 படத்தில் நடித்து வருகிறார். வருகின்ற 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் விஜய் போட்டி போட உள்ளதால் சினிமாவில் இருந்த மொத்தமாக விலகுவதாக அறிவித்திருக்கிறார். இந்த சூழலில் கோட் படத்தில் ஒரு காட்சி வைக்கப்பட்டிருந்தது.

அதாவது தமிழ் சினிமாவில் தளபதி என்ற ஒரு முக்கியமான இடம் விஜய்க்கு இருக்கிறது. இந்நிலையில் விஜய் அரசியலுக்கு சென்றால் அந்த இடத்தில் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இதனால் கோட் படத்தில் தனது துப்பாக்கியை விஜய் சிவகார்த்திகேயன் கையில் கொடுத்துவிட்டு செல்வார்‌.

ஆகையால் விஜய்யின் அடுத்த இடம் சிவகார்த்திகேயன்-க்கு தான் என்று பேசப்பட்டு வந்தது. இதைத்தொடர்ந்து கங்குவா படத்தின் டிரைலரிலும் துப்பாக்கியை பயன்படுத்துவது போன்ற காட்சிகள் வைக்கப்பட்டிருந்தது. இதனால் சூர்யா தான் அந்த இடத்திற்கு வருவார் என்று ரசிகர்கள் ஆர்ப்பரித்தனர்.

துப்பாக்கியில் கவனம் செலுத்தும் டாப் ஹீரோக்கள்

ஆனால் கங்குவா படம் எதிர்பார்த்த அளவுக்கு போகாமல் படுதோல்வியை சந்தித்தது. அடுத்ததாக நேற்றைய தினம் அஜித்தின் விடாமுயற்சி டீசர் வெளியாகி இருந்தது. இதிலும் அஜித் துப்பாக்கியை கையில் வைத்திருக்கும் காட்சி இடம் பெற்றிருக்கிறது.

இதனால் அஜித் ரசிகர்கள் இப்போது தமிழ் சினிமாவில் முதல் இடம் அஜித் தான் இருக்கப் போகிறார்கள் என்று ஆர்ப்பரித்துக் கொண்டிருக்கின்றனர். ஏனென்றால் இப்போது துப்பாக்கி அஜித்தின் கையில் என்று கூறி வருகின்றனர். இதைப் பார்த்த மற்ற நடிகர்களின் ரசிகர்கள் சூர்யாவுக்கு இதே போல் தான் சொல்லி கங்குவா மண்ணை கவியது.

இப்போது அதே நிலைமை அஜித்துக்கும் ஏற்படும் என பலர் கலாய்த்து வருகிறார்கள். ஆனால் விடாமுயற்சி டீசர் இப்போது ரசிகர்களை கவர்ந்துள்ள நிலையில் கண்டிப்பாக படமும் நன்றாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் விரைவில் விடாமுயற்சி ரீலீஸ் தேதி அறிவிக்கப்பட உள்ளது.

- Advertisement -

Trending News