Connect with us
Cinemapettai

Cinemapettai

vijay-ajith-cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

இனி 200 கோடி, 300 கோடி வசூல் என பொய் சொல்ல முடியாது.. முன்னணி நடிகர்களின் படங்களுக்கு ஆப்பு தான்!

இந்திய சினிமாவில் உள்ள ரசிகர்களை பொறுத்தவரை தங்களுடைய நடிகர்களின் படங்கள் பெரிய அளவில் வசூல் செய்வதாக கூறுவதையே வியாபாரமாக மாற்றி அமைத்து விட்டனர். இதை வைத்து ட்விட்டரில் வசூல் சொல்கிறேன் என்ற பெயரில் ஒரு கூட்டம் கொள்ளையடித்து வந்தது.

அதற்காக தயாரிப்பாளர்கள் தங்களது தரப்பில் இருந்து ஒரு குறிப்பிட்ட தொகையை அந்த மாதிரி டிராக்கர்ஸ் என்பவர்களுக்கு கொடுத்து சினிமாவின் வியாபாரத்தை அதிகமாக கூறி கூறி ரசிகர்களின் மண்டையை கழுவி வந்தனர்.

தற்போது அதற்கெல்லாம் ஆப்பு வைத்துவிட்டார்கள். இனி எந்த ஒரு படமும் 200 கோடி, 300 கோடி என வசூல் செய்வதற்கு வாய்ப்பே இல்லை என்கிறது சினிமா வட்டாரம்.

பெரிய நடிகர்களின் படங்களை தவிர சிறு பட்ஜெட் படங்கள் பெரும்பாலும் OTT தளங்களில் வெளியிடுவதற்கு அதிகம் விரும்புகின்றனர். பெரிய அளவில் நஷ்டம் ஏற்படாது என்பதால் அந்த வழியை தேர்ந்தெடுத்துள்ளனர்.

இனிவரும் காலங்களில் தியேட்டர் அளவுக்கு OTTயின் பயன்பாடுகளும் மக்களுக்கு பழக்கமாகி விடும் என தெரிகிறது. அப்படிப் பார்க்கப்போனால் பெரிய ஹீரோக்களின் படங்கள் மட்டுமே தியேட்டரில் வெளியாகும்.

இனி விஜய், அஜித், ரஜினி, கமல், சூர்யா, விக்ரம் என்பவர்களின் படங்களின் வசூல் விவரங்களை கூறி யாருக்கும் சண்டை மூட்டி விட முடியாது. வருடத்திற்கு பெரிய நடிகர்களின் படங்கள் மட்டும் வந்தால் எளிதாக வசூல் விவரங்கள் வெளியாகி விடும்.

தயாரிப்பு நிறுவனங்களும் தாங்களாகவே முன்வந்து படத்தின் வியாபாரத்தை கூற வேண்டிய நாள் வெகு தொலைவில் இல்லை.

Continue Reading
To Top