கனடாவில் தமிழர்கள் அதிகமானோர் வசித்து வருகின்றனர். அங்கு தமிழ் கலாச்சாரத்தை கடைப்பிடிக்க வேண்டும் என்று அதிகம் ஆசைப்படுவார்கள்.

தமிழர்கள் அதிக திறமை உள்ளவர்களாகவும், தைரியசாலியாகவும், வாழவைக்கும் நாட்டுக்கு உயிரைக் கொடுத்து வேலை செய்பவர்களாகவும் இருக்கின்றனர்.

இதனால் கனடாவில் யார் ஆட்சிக்கு வந்தாலும் தமிழர்களுக்கு மதிப்பளித்து உறுதுணையாக இருந்து வருகின்றனர்.

தமழர்கள் மீது மதிப்பும், மரியாதையும் உள்ள நாட்டில் ஜோசியம்  பார்த்து பிழைப்பு நடத்தி வந்தார் பாஸ்கர் முனியப்பா. இவர் உலகப்புகழ் பெற்ற கனடா தமிழ் ஜோதிடர்.

இவர் கணவன் மனைவி, காதலன், காதலி ஆகியோரிடையே ஏற்படும் பிரச்சனைகளை தீர்ப்பதில் வல்லவர் என்று பெயர் எடுத்தவர்.

இதனால் குடும்ப வாழ்க்கையில் பிரிந்த கணவன், மனைவிகள் இவரிடம் வந்து ஜாதகம் பார்த்து, பாரிகாரம் செய்து கொண்டு, மீண்டும் வாழ்க்கையில் இணைந்த தம்பதிகள் அதிகம் உள்ளனர்.

இது போலதான், கடந்த 2014ம் வருடம், கணவரைப் பிரிந்த பெண் ஒருவர் அவரிடம் வந்துள்ளார். எப்படியாவது எனது கணவரை என்னுடன் சேர்த்து வையுங்கள் என்று  கூறியுள்ளார்.

அதிகம் படித்தவை:  ப்ளஸ் டூ தேர்வு முடிவுகள் வெளியீடு: எத்தனை பேரு எந்தெந்த பாடத்துல சென்டம் தெரியுமா?

அதற்கு ஜோதிடர் முனியப்பா, நான் சொல்லும்படி கேட்டால் இனி வரும் 21 வருடத்திற்கு உனக்கும், உன் கணவனுக்கு பிரச்சனை ஏற்படாது என்று ஆசை வார்த்தை கூறியுள்ளார்.

இதனை நம்பிய அந்த பெண், ஜோதிடர் முனியப்பா கூறுவதை கேட்பதாக முடிவெடுத்தார்.

அதன்படி, அந்த பெண்ணை வரவழைத்து, எலும்மிச்சை பழத்தை ஆடையின்றி, அவரின் கண்முன்னே 20 நிமிடம் உடலின் அனைத்து பாகங்களிலும் தேய்க்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

கணவனுடன் சேரவேண்டும் என்கிற எண்ணத்தில் அந்த பெண்ணும் சரி என்று கூறினார். அதன்படியே அவரும் செய்தார்.

இதனிடையே சில தினங்களில் அந்த பெண்ணின் கணவர் அவரிடம் போனில் பேச துவங்கியுள்ளார்.

இதனைப்பார்து மிகிழ்ச்சியடைந்த அந்த பெண், ஜோதிடரிடம் கூறியுள்ளார். உன் கணவன் உன்னுடனே நிரந்தரமாக இருக்க வேண்டும் என்றால் நான்சொல்வதை கேட்க வேண்டும் என்று கூறினார்.

அதற்கும் சம்மதித்த்தாள் அந்த பெண். இதனையடுத்து, ஜோதிடர் அந்த பெண்ணை தன்னுடன் உறவு வைத்துக் கொண்டால் உன் கணவர் சேர்ந்துவிடுவார் என்று கூறி, அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

அதிகம் படித்தவை:  ஜாக்கிசானின் மகளுக்கு இப்படி ஒரு நிலைமையா?!!

இதனையடுத்து போனில் பேசிவந்த கணவன் இதனைத்தொடர்ந்து பேசுவதையே நிறுத்திவிட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த அந்த பெண், ஜோதிடர் தன்னை ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்துவிட்டதாக போலீசில் புகார் செய்தார்.

போலீசார் வழக்கு பதிவு செய்து, ஜோதிடரை கைது செய்து சிறையில் அடைந்தனர். இது போன்று பல  பெண்கள், தங்களையும் இவ்வாறு கூறி ஜோதிடர் பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் கூறினர்.

கடந்த 3 ஆண்டுகளாக வழக்கு நடந்து வந்தது. ஜாமீனில் வெளிவந்த ஜோதிடர் தலைமறைவானார். இதனையடுத்து சில தினங்களுக்கு முன்னர் மீண்டும் கைது செய்யப்பட்டார்.

ஜோதிடர் இனி நான் கனடாவில் இருக்க முடியாது, தண்டனை முடிந்த பின்பு, நான் நாடு கடத்தப்படலாம் என்று தனக்கு தானே ஜோதிடம் கணித்து கூறினாராம்.

இந்த ஜோதிடரின் சொந்த ஊர் இலங்கை, ஜோசியர், சாமியார் இவர்கள் எங்கு சென்றாலும் இது போன்ற தவறான செயல்களை செய்வதை விடுவதில்லை என்று உலக தமிழர்கள் தலையில் அடித்துக் கொள்கின்றனர்.