Connect with us
Cinemapettai

Cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

இரட்டை வேடத்தில் கார்த்தி, ஆர்யாவின் பாக்சிங் படம், பார்த்திபனுடன் இணையும் காமெடியன்- கோலிவுட் கிசு கிசு

குட்டி கிசு கிசு, உண்மை சம்பவம் ஆவது கோடம்பாக்கத்தில் ஒன்றும் புதுசு கிடையாது. அது போன்ற சில காத்து வாக்கில் வந்த செய்திகளின் தொகுப்பே இந்த பதிவு ..

கார்த்தி –  தேவ், கைதி, தம்பி என இந்த வருடம் மூன்று ரிலீஸ் மனிதருக்கு. கைதி சூப்பர் ஹிட், தம்பி ஹிட். கார்த்தி அடுத்து மணிரத்தினத்தின் பொன்னியின் செல்வன் படத்தில் வந்தியத்தேவன் வேடத்தில் நடிப்பது உறுதி ஆகியுள்ளது.

இந்நிலையில் மனிதர் டபிள் ஆக்ஷனில் நடிக்கிறாராம். ட்ரீம் வாரியர்ஸ் பிக்ச்சர்ஸ் இப்படத்தை தயாரிக்க உள்ளனர். இரும்புத்திரை, ஹீரோ படங்களின் இயக்குனர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் தான் இந்த புதிய ப்ரொஜெக்ட்டாம். விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகுமாம்.

ஆர்யா – பா ரஞ்சித் : சமீபகாலாமாக ரஞ்சித் உடன் சர்ச்சை என்ற வார்த்தை ஓட்டிக்கொண்டே தான் உள்ளது. இவர் இயக்கிய அட்டகத்தி, மெட்ராஸ் படங்களை புகழ்ந்தவர்கள் கூட தற்பொழுது ஒதுங்கி நிற்கின்றனர். அதற்கு காரணம் இவர் இயக்கிய, தயாரித்த படங்கள் மட்டுமன்றி இவர் பதிவிடும் கருத்துக்களும் காரணம்.

சர்பேட்டா பரம்பரை என்பது நார்த் மெட்ராஸ் பின்னணியில் பாக்சிங் படம். பல வருடங்கள் முன்பு கார்த்தி நடிக்க வேண்டியது. ஆனால் ப்ரொஜெக்ட் டேக் – ஆப் ஆகவில்லை. இந்நிலையில் இப்படத்தில் ஆர்யா நடிப்பதும், ரஞ்சித் இயக்குவதும் உறுதியானது. 2020 இல் ஷூட்டிங்.

FAN MADE POSTER SALPETTA

எனினும் தயாரிப்பாளர் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாம். எனவே ஆர்யா – ரஞ்சித் இணைந்து தயாரிப்பார்கள் என்கின்றனர் விஷயம் அறிந்தவர்கள். படத்திற்கு சல்பேட்டா என்பது தான் தலைப்பாம்.

வைகைப்புயல் வடிவேலு – ஒரு காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் சூறாவளியாக இருந்தவர். அன்று தொடங்கி இன்று கூட மீம்ஸ் டெம்ப்லேட், டிக் டொக் ரெபெர்னஸ் மனிதர் தான்.

24 ம் புலிகேசி படத்தில் ஏற்பட்ட பிரச்சனை, பேய் மாமா படத்திலும் தொடர மனிதர் மிகவும் அப்செட். விரைவில் இணையதளத்தில் வருவார் என்ற பேச்சும் வந்தது. யூ ட்யூப் சேனல், வெப் சீரிஸ் என பலரும் குழப்பி வந்தனர். ஆனால் அதுவும் கிடையாது நடித்தால் சினிமா மட்டும் தான் என்பது வடிவேலுவின் முடிவாம்.

இந்நிலையில் இயக்குனர் பார்த்திபன், வடிவேலு அவர்களை சந்தித்துள்ளார். அந்த போட்டோவையும், சூசகமாக தனது வார்த்தை ஜாலத்தில் ஸ்டேட்டஸும் தட்டியுள்ளார்.

விரைவில் அறிவிப்பை எதிர்பார்க்கலாம்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top