fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

சோசியல் மீடியாவில் கணக்கை தொடங்காமல் ஏமாற்றும் 3 கோலிவுட் பிரபலங்கள்- அவர் மட்டும் ஆரம்பிக்கட்டும்

Tamil Cinema News | சினிமா செய்திகள்

சோசியல் மீடியாவில் கணக்கை தொடங்காமல் ஏமாற்றும் 3 கோலிவுட் பிரபலங்கள்- அவர் மட்டும் ஆரம்பிக்கட்டும்

கிட்டதட்ட வருடத்திற்கு 500 படங்களுக்கு மேல் வெளியிடும் தமிழ் திரைப்பட துறை மட்டும் தான். பல கோடி பிஸ்னஸ் சாம்ராஜ்யம். கோலிவுட், கோடம்பாக்கம் என கலை காட்டும் கலாச்சாரம் இங்கே. மாஸ் ஹீரோவும் உண்டு, ஹீரோவாக போராடும் ஜூனியர் ஆர்டிஸ்டும் உண்டு. பல போட்டோ ஷூட்டுகளை நடத்தி தள்ளி ஒரு ஹீரோயின் வாய்ப்பை தட்டி செல்ல மாட்டோமா என ஏக்கத்துடன் டிக் டொக் செய்த பெண்கள் ஏராளம் இங்கே உண்டு. நடனம், இசை பாடல், என தங்களின் திறனை யூ ட்யூபில் பதிவிட்டுள்ளவர்கள் ஏராளமே.

சமூகவலைத்தளம் என்கின்ற இந்த ட்விட்டர், இன்ஸ்டாகிராம், பேஸ் புக், யூ ட்யூப் அந்தளவுக்கு பிரபலம் தான். தங்களுக்கு பிடித்த நட்சத்திரங்களின் படம், அன்றாட வாழ்க்கையை தெரிந்துகொள்ள பல சாமானியர்கள் இவர்களின் பக்கங்களை தொடர்வது வாடிக்கை.

Kollywood

அந்த வகையில் ஒரு சில பிரபலங்கள் இது போன்ற சோஷியல் மீடியா கணக்கை துவங்கமாட்டார்களா என ரசிகர்கள் ஏங்குவதும் இங்கே வாடிக்கை தான். பலர் இந்த டெக்னலாஜி வேண்டாம் என ஒதுங்கி தான் உள்ளனர். ஆனால் ரசிகர்கள் மிக ஆர்வமாக காத்திருக்கும் பிரபலங்கள் ஒரு சிலர் பற்றியதே இந்த தொகுப்பு

தல அஜித் – நம் கோலிவுட்டின் மாஸ் மகாராஜா. கோடிக்கணக்கில் ரசிகர்களை உடையவர். ரசிகர் மன்றத்தை கலைத்தும் கூட விசுவாசமான ரசிகர் வட்டம் உடைய மனிதர். பட ப்ரோமோஷன், இசை வெளியீடு, பேட்டி கொடுப்பது என அனைத்தையும் தவிர்த்து விட்டார். அப்படி இருக்கும் சூழலில் இவர் ட்விட்டர், இன்ஸ்டாகிராம் பக்கம் வருவது வாய்ப்பே இல்லை தான். எனினும் சாமானிய ரசிகனின் முதல் பாவரிட் இவர் தான்.

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா – தென்னக சினிமாவின் மாஸ் மஹாராணி என்று கூட சொல்ல முடியும். ஐயா படத்தில் ஆரம்பித்து நெற்றிக்கண் வரை இவரது வளர்ச்சி வேறு விதம் தான். பெர்சனல் வாழ்க்கையில் இவர் சந்தித்ததை ஏற்ற தாழ்வு என அனைத்தையும் கடந்து முன்னேறி சிங்கபெண்ணாகவே உள்ளார்.

top 3

நயன்தாராவின் அப்டேட்டை விக்கி நமக்கு தட்டி விடுகிறார் என்பது ஓகே தான். எனினும் இவர் மட்டும் ட்விட்டர், இன்ஸ்டாகிராம் பக்கங்களில் கணக்கை துவக்கினால் பலர் தங்கள் பட டைட்டில், பர்ஸ்ட் லுக் என இவரை வைத்தே பிரீ மார்க்கெட்டிங் செய்து ரீச் பெற முடியும்.

இசைஞானி இளையராஜா – கலைத்தாயின் மூத்தமகன். இசை அரக்கன் என கூட சொல்லலாம். உலகளவில் பிரசித்தி பெற்ற நபர். இவர் மட்டும் யூ ட்யூப் / ட்விட்டரில் கணக்கை தொடங்கி இசை பற்றி பேசி, பதிவிடும் பட்சத்தில் அதுவே ஒரு களஞ்சியமாக மாறிவிடும். வரும் சந்ததிக்கு அதுவே ஒரு பாட புஸ்தகம்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
To Top