வியாழக்கிழமை, பிப்ரவரி 20, 2025

கம்பெனியை பிரபலப்படுத்த நடிகரான 5 முதலாளிகள்.. அதுல நம்ம அண்ணாச்சி மட்டும் டாப் கிளாஸ்

பொதுவாக பிரபலமாக இருக்கும் ஒரு நிறுவனம் மக்களிடையே சென்றடைய அதிக விளம்பரங்கள் தேவைப்படும். அப்படிப்பட்ட விளம்பரங்களை எடுப்பதற்கு சம்பந்தப்பட்ட நிர்வாகம் சினிமா துறையில் பிரபலமாக இருக்கும் நடிகர், நடிகைகளை அணுகுவது உண்டு. இதற்காக பல லட்சம் சம்பளமும் அவர்களுக்கு கொடுக்க வேண்டி இருக்கும்.

இதனால் நடிகர்களுக்கு கொடுக்கும் காசை மிச்சப்படுத்தி அதிலும் லாபம் பார்ப்பதற்காக சம்பந்தப்பட்ட நிர்வாகம் ஒரு புது டெக்னிக்கை உபயோகப்படுத்தி வருகிறது. அவரது சமீப காலமாக தங்கள் ப்ராடக்ட்டை பாப்புலர் ஆக்குவதற்கு அந்த நிறுவனத்தின் முதலாளிகளே விளம்பரத்தில் நடிக்க ஆரம்பித்து விட்டனர். அவர்கள் யார் என்பதை பற்றி இங்கு காண்போம்.

வசந்த் அண்ட் கோ ஓனர் சென்னை மட்டுமல்லாமல் தமிழகம் முழுவதிலும் மிகப் பிரபலமாக இருக்கும் நிறுவனம் இது. வீட்டுக்கு தேவையான அனைத்து பொருட்களும் இந்த கடையில் நமக்கு கிடைக்கும். இதை விளம்பரப்படுத்துவதற்காக இதன் ஓனர் வசந்தகுமார் இந்த விளம்பரத்தில் நடித்திருக்கிறார்.

லலிதா ஜுவல்லரி ஓனர் சென்னையில் மிகவும் பிரபலமாக இருக்கும் இந்த நகை கடையின் ஓனர் கிரண் குமார். பல வருடங்களுக்கு முன்பு ஆரம்பிக்கப்பட்ட இந்த நிறுவனம் தற்போது வரை வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது. இந்த கம்பெனியின் விளம்பரத்தில் இதன் ஓனர் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

ஆச்சி மசாலா ஓனர் மிகவும் புகழ் பெற்ற இந்த மசாலா நிறுவனத்தை பத்மசிங் ஐசக் திறம்பட நடத்தி வருகிறார். இவர் இந்த விளம்பரப் படத்தில் நடித்ததற்கு பிறகுதான் ஆச்சி மசாலா அதிக பிரபலம் அடைந்தது.

போத்திஸ் ஓனர் தமிழ்நாட்டில் வைத்திருக்கும் இந்த நிறுவனத்தின் ஓனர் போத்தீஸ் ரமேஷ். சில மாதங்களுக்கு முன்பு இவரும் இந்த கடையின் விளம்பரத்தில் நடித்தது குறிப்பிடத்தக்கது.

லெஜெண்ட் சரவணா ஸ்டோர் அண்ணாச்சி தமிழ்நாட்டில் மிகவும் பிரபலமாக இருக்கும் ஓனர் யார் என்று கேட்டால் அது நிச்சயம் இவர் மட்டும்தான். இவர் கலர் கலராக உடை அணிந்து பிரபல ஹீரோயின்களுடன் ஆடி நடிகர்களுக்கே ஆச்சரியத்தை ஏற்படுத்தியவர். பலரும் இவரை கிண்டல் அடித்து பேசினாலும் அதை எல்லாம் கண்டு கொள்ளாமல் தொடர்ந்து விளம்பரங்களில் நடித்து வரும் இவர் தற்போது சினிமாவிலும் நடிக்க ஆரம்பித்துவிட்டார்.

Trending News