Connect with us
Cinemapettai

Cinemapettai

gossip

Tamil Cinema Gossips | சினிமா கிசுகிசு | Tamil Cinema KisuKisu

மனசு மாறி கல்யாணம் பண்ணிக்கலாமா எனக் கேட்ட நடிகை.. இப்போதைக்கு வேண்டாம் என மறுத்த இயக்குனர்

தமிழ் சினிமாவில் அதிக சர்ச்சைக்குள்ளான நடிகை என்றால் அவர்தான். அதுவும் காதல் தான் அவரது வாழ்க்கையை கண்டம் ஆகிவிட்டது.

அதுவும் ஒரு காதல் இரண்டு காதல் இல்லை. பல காதல்கள். அந்த நடிகையின் வாழ்க்கையில் பல நடிகர்கள் சில இயக்குனர்கள் என மாறி மாறி இருந்து வருகின்றனர்.

ஒவ்வொரு முறையும் காதலில் பிரியும் போதும் அந்த நடிகை தன்னுடன் இருந்த நடிகர்கள் மற்றும் இயக்குனர்களை காரணம் காட்டி பிரிந்து வந்தார்.

தற்போது கடைசியாக ஒரு இயக்குனருடன் தன்னுடைய காதலை வளர்த்து வருகிறார் அந்த நடிகை. காதலிக்க ஆரம்பித்ததிலிருந்து அந்த இயக்குனர் தொடர்ந்து நடிகையிடம் விரைவில் திருமணம் செய்து கொள்ளலாம் என கெஞ்சி வந்த செய்தி அனைவருக்கும் தெரிந்ததுதான்.

ஆனால் தற்போது அந்த நடிகையே மனம் மாறி விரைவில் திருமணம் செய்து கொள்ளலாம் என இயக்குனரிடம் கேட்டபோது, இப்போதைக்கு வேண்டாம் என முட்டுக்கட்டை போட்டு விட்டாராம் அந்த இயக்குனர்.

இதனால் அந்த நடிகைக்கு தன்னுடைய காதலில் இருந்த நம்பிக்கை குறைந்து விட்டதாம். அந்த இயக்குனரும் சுற்றும் வரை சுற்றிவிட்டு தற்போது லைட்டாக விலக ஆரம்பித்ததால் அந்த நடிகைக்கு அடிவயிற்றில் புளியைக் கரைத்துக் கொண்டிருக்கிறதாம்.

சீக்கிரம் ஒரு முடிவுக்கு வாங்க என கோலிவுட் வட்டாரங்களில் அவர்களைப் பற்றி கிண்டல் அடிக்காதவர்களே கிடையாதாம்.

Continue Reading
To Top