மூன்றாவது முறையாக விஜய்க்கு ஜோடியாகும் பிரபல நடிகை.. எதிர்பார்ப்பை கிளப்பிய தளபதி 66

விஜய் தற்போது தளபதி 65 படத்தில் நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தை நெல்சன் இயக்கி வருகிறார். மேலும் மூன்றாவது முறையாக அனிருத் இப்படத்திற்கு இசையமைத்து வருகிறார்.

தனது படத்தில் விஜய் ஜோடியாக முதன் முதலாக பூஜா ஹெக்டே ஒப்பந்தமாகியுள்ளார். தமிழில் முகமூடி என்ற படத்தின் மூலம் அறிமுகமாகி பின்னர் தெலுங்கு சினிமாவில் டாப் நடிகையானார்.

தற்போது மீண்டும் தமிழில் ரீ என்ட்ரி ஆக உள்ள விஜய் படத்தை மிகவும் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறார். அதனைத் தொடர்ந்து வேறு சில தமிழ் முன்னணி நடிகர்களின் படவாய்ப்புகளும் அவரை தேடி வந்து கொண்டிருக்கிறது.

இந்நிலையில் தளபதி 65 படத்தைவிட தளபதி 66 படத்தைப் பற்றிய செய்திகள்தான் அளவுக்கதிகமாக கோலிவுட் வட்டாரங்களில் வலம் வந்து கொண்டிருக்கின்றன. தளபதி 66 படத்தை தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிக்க உள்ளதாகவும், தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிபல்லி என்பவர் இயக்க உள்ளதாகவும் செய்திகள் வந்துள்ளன.

பிரமாண்ட பட்ஜெட்டில் ஐந்து மொழிகளில் உருவாகும் இந்த படத்தில் இரண்டு நாயகிகள் நடிக்க உள்ளார்களாம். அதில் ஒருவராக ஏற்கனவே பைரவா, சர்கார் போன்ற படங்களில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார்.

உடல் எடையை குறைத்த பிறகு வாய்ப்பு இல்லாமல் தடுமாறிக் கொண்டிருக்கும் கீர்த்தி சுரேஷுக்கு விஜய் படத்தின் மூலம் மீண்டும் மார்க்கெட் கிடைக்கும் எதிர்பார்த்து இந்த வாய்ப்பை ஓகே சொல்லி உள்ளாராம்.

keerthi-suresh-cinemapettai
keerthi-suresh-cinemapettai
- Advertisement -spot_img

Trending News