Tamil Cinema Gossips | சினிமா கிசுகிசு | Tamil Cinema KisuKisu
ஹலோ இந்த ரேட்டுக்கு தான் வருவேன்.. தயாரிப்பாளரிடம் சாட்டையை சுழற்றும் பிரபல நடிகை
தமிழில் ஒரே விளங்காத படத்தில் நாயகியாக அறிமுகமானவர் தான் இந்த பிரபல நாயகி. படம் படு குப்பை என தியேட்டர்காரர்களே ஒரு காட்சிக்கு மேல் ஓட்ட மாட்டோம் எனக் கூறிய பெருமை இந்த படத்தையே சாரும்.
இருந்தாலும் அக்கட தேசத்தில் இந்த நடிகைக்கு அப்படி ஒரு வரவேற்பாம். நடிகை தொட்டதெல்லாம் பொன்னாகிறது போல. சமீபத்தில் நடிகை நடிப்பில் வெளியாகும் அனைத்து படங்களும் கோடிகளைக் குவித்து வருகிறதாம்.
ஏன் தற்போது தமிழ் சினிமாவின் டாப் நடிகர் படத்தில் கூட அந்த நடிகையை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. அதுமட்டுமல்லாமல் நடிகைகள் பாலிவுட் வாய்ப்புகளும் தொடர்ந்து வந்தவண்ணம் உள்ளன.
இதனால் தற்போது தமிழுக்கு ஒரு ரேட், தெலுங்குக்கு ஒரு ரேட், பாலிவுட்டுக்கு தனி ரேட் என தயாரிப்பாளர்களை மிரள வைத்து வருகிறாராம் அந்த நாயகி. பாலிவுட் என்றால் நார்மல் சம்பளத்தைவிட பல மடங்கு கேட்கிறாராம்.
ஒண்ணும் இல்லாத நாயகியை உருவாக்கி விட்டதற்கு இதுதான் கூலியா என தயாரிப்பாளர்கள் தலையில் அடித்துக் கொள்கிறார்களாம். சமீபத்தில் இவருடைய நடிப்பில் வெளிவந்த ஒரு பொம்ம பாடல் தமிழ் தெலுங்கு மலையாளம் இந்தி கன்னடம் என அனைத்து மொழிகளிலும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
எந்த தயாரிப்பாளர்கள் வந்தாலும், காசு பணம் துட்டு மணி மணி என்ற பாட்டை போட்டு கொண்டு ஆட்டம் போடுகிறாராம் அந்த நாயகி. அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்திரியிலும் குடை பிடிப்பான் என்பது இந்த நடிகையின் வாழ்க்கையில் சாத்தியமாகியுள்ளது என புலம்புகிறார்கள் தயாரிப்பாளர்கள்.
