Tamil Cinema Gossips | சினிமா கிசுகிசு | Tamil Cinema KisuKisu
திருமண வயது தாண்டியாச்சு.. மார்க்கெட்டில் வியாபாரம் ஆகாததால் அரசியல் ஆசையில் டாப் நடிகை
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவின் ரசிகர்களின் கனவு கன்னியாக பல ஆண்டுகளாக இருப்பவர் அந்த பிரபல நடிகை. புது புது நடிகைகளின் வரவால் அவருக்கு அவ்வளவாக வாய்ப்புகள் இல்லாத போதும் ஹீரோயின் சப்ஜெக்ட் கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.
ஆனால் அந்த கதைகள் அனைத்தும் நடிகைக்கு பெரிய அளவில் வெற்றியை கொடுக்கவில்லை. இதனால் வெப்சீரிஸ் தொடரில் நடிப்பதற்கும் நடிகை ஆர்வம் காட்டி வருகிறார். இந்நிலையில் நடிகை அரசியலில் குதிக்கப் போவதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கிறது.
சிறு வயது நடிகைகளே திருமணம் செய்து கொண்டு குடும்ப வாழ்க்கையில் செட்டிலாகி வருகின்றனர். ஆனால் இவர் மட்டும் பல வருடங்களாக சிங்கிளாக இருக்கிறார். இவருக்கு போட்டியாக பார்க்கப்பட்ட நடிகை கூட சமீபத்தில் திருமணம் செய்து கொண்டு விட்டார். ஆனால் இந்த நடிகை திருமணத்தில் நாட்டமில்லாமல் இருக்கிறார்.
இது பற்றி யாராவது கேட்டால் சினிமாவில் சாதிக்க வேண்டியது நிறைய இருக்கு என்று கூறி அனைவருக்கும் அதிர்ச்சி கொடுக்கிறார். இப்போது நடிகை சினிமாவை தாண்டி, அரசியலில் ஈடுபட போவது பலருக்கும் வியப்பை கொடுத்திருக்கிறது. இதற்கு என்ன காரணம் என்று பலரும் பல விதமாக யோசித்து வருகின்றனர்.
தற்போது நடிகைக்கு திருமணம், சினிமா என்று எதுவும் வொர்க் அவுட் ஆகாத நிலையில் தான் இப்படி ஒரு முடிவை எடுத்திருக்கிறாராம். விரைவில் பிரபல கட்சியில் சேரப் போகும் நடிகையின் அரசியல் என்ட்ரி எப்படி இருக்கப்போகிறது என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
