தமிழ் சினிமாவில் வெகு சீக்கிரத்திலேயே முன்னணி இயக்குனராக மாறியுள்ள லோகேஷ் கனகராஜ் படத்தில் ஹீரோ வேஷம் வேண்டாம் என சமீபகாலமாக பிரபல நடிகர்கள் ஓட்டம் பிடிக்கிறார்களாம். அதற்கு காரணம் மாஸ்டர் படம் தான்.
விஜய் படமாக வெளியாகி விஜய் சேதுபதி படமாக மாறியது தான் மாஸ்டர். விஜய்யின் ஜேடி(JD) கதாபாத்திரத்தை விட விஜய் சேதுபதி நடித்த பவானி கதாபாத்திரத்தின் தாக்கம் இன்னமும் ரசிகர்கள் மத்தியில் அதிகமாக இருக்கிறது.
என்னதான் விஜய் ஸ்டைலாக வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும் தன்னுடைய அசால்ட்டான வில்லன் கதாபாத்திரத்தில் மூலம் அனைவரையும் மிரட்டி விட்டார் விஜய் சேதுபதி. பவானி கதாபாத்திரம் தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் வெளியான அனைத்து மொழிகளிலும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் இயக்கும் அடுத்தடுத்த படங்களில் ஹீரோவை விட வில்லன் வேடங்களில் நடிக்க முன்னணி நடிகர்கள் பலரும் ஆர்வம் காட்டி வருகிறார்களாம். ஹீரோவை விட வில்லன் நடிகருக்கு அவர் எழுதும் திரைக்கதையும் வசனங்களும் சிறப்பாக இருப்பதாக கூறுகின்றனர்.
மாஸ்டர் படத்திற்கு பிறகு விஜய் சேதுபதி இப்படி உச்சத்திற்குப் போவார் என அவர் கனவிலும் நினைத்துப் பார்த்திருக்க மாட்டார். அந்த அளவுக்கு தமிழ், தெலுங்கு, ஹிந்தி என கொடிகட்டி பறந்து வருகிறார்.
விஜய் சேதுபதி போல் ஆக வேண்டும் என பல நடிகர்கள் தற்போது லோகேஷ் கனகராஜ் படங்களில் வில்லன் வேடம் கிடைக்குமா என எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்களாம். அந்த வகையில் லோகேஷ் இயக்கத்தில் கமல் நடிக்கும் விக்ரம் படத்தில் யார் வில்லனாக நடிக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு இப்போதே அதிகமாகியுள்ளது.