பிரபல முன்னணி நடிகர் ஒருவர் ஒரே நேரத்தில் 15 படங்களை தயாரிக்கப் போகிறேன் என அதிகாரபூர்வமாக அறிவிப்பு வெளியிட்டது தான் பல தயாரிப்பாளர்களுக்கும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
சினிமாவைப் பொருத்தவரை தயாரிப்பாளர்கள் இல்லையென்றால் நடிகர்கள் இவ்வளவு சொகுசாக வாழ முடியாது என்பது அவர்களுக்கே தெரியும். அதன் காரணமாக பல நடிகர்கள் தயாரிப்பாளர்களை கடவுள் போல் வணங்கி வருகின்றனர்.
இன்னும் சில நடிகர்கள் தயாரிப்பாளர்களை மதிக்காமல் தன்னுடைய புகழ் போதையில் ஆடி பிற்காலத்தில் எந்த ஒரு சப்போர்ட்டும் இல்லாமல் நடுத்தெருவுக்கு வந்ததையும் பார்த்திருக்கிறோம்.
ஆனால் இந்த முன்னணி நடிகர் தயாரிப்பாளராக மாறுவதற்கு வேறு ஒரு காரணமும் உள்ளதாம். இளம் இயக்குனர்கள் பலரும் திறமைகளை கையில் வைத்துக்கொண்டு வாய்ப்பு கிடைக்காமல் சுற்றி வருவதைப் பார்த்ததால் இப்படி ஒரு முடிவை எடுத்துள்ளார் அந்த முன்னணி நடிகர்.
அவர் வேறு யாரும் இல்லை. தெலுங்கு சினிமாவில் டாப் நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் பவன் கல்யாண் தான். 3 வருட இடைவெளிக்குப்பிறகு பவன் கல்யாண் நடிப்பில் வக்கீல்சாப் என்ற படம் ஏப்ரல் 9ஆம் தேதி வெளியாக உள்ளது. இது தமிழில் அஜித் நடித்த நேர்கொண்ட பார்வை படத்தின் தெலுங்கு ரீமேக் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தின் ரிலீஸ் பற்றிய விழா ஒன்றில் தான் பவன் கல்யாண் மற்றொரு நிறுவனத்துடன் சேர்ந்து மொத்தம் 15 படங்களை ஒரே நேரத்தில் தயாரிக்க இருப்பதாக தெரிவித்துள்ளார். இதன் மூலம் பல இளைஞர்களுக்கும் வாய்ப்பு தரப்போவதாக அவர் தெரிவித்துள்ள இந்த முடிவு பலரிடமும் வரவேற்பை பெற்றுள்ளது.