Connect with us
Cinemapettai

Cinemapettai

vijay-venkat prabhu

Tamil Cinema News | சினிமா செய்திகள்

வெங்கட் பிரபுவை அலட்சியப்படுத்திய டாப் ஹீரோ.. கடுப்பில் விஜய்யை வைத்து பதிலடி கொடுக்கும் தளபதி 68

நம்பி இருந்த டாப் நடிகர் வெங்கட் பிரபுவை அலட்சியப்படுத்தியதால் கடுப்பில் விஜய்யிடம் சேர்ந்து விட்டார்

பொதுவாகவே வெங்கட் பிரபு சினிமாவிற்கு என்டரி கொடுத்ததில் இருந்து பெரிதும் கவனிக்கப்படாத ஒருவராக தான் இருந்தார். அதன்பின் படிப்படியாக ஒவ்வொரு படங்களை இயக்கி ஓரளவுக்கு பரிச்சயமான நிலையில் யாரும் எதிர் பார்க்காத நேரத்தில் அஜித்தை வைத்து மங்காத்தா என்ற மிகப்பெரிய ஹிட் படத்தை கொடுத்தார்.

இப்படம் அஜித்துக்கும், வெங்கட் பிரபுக்கும் சினிமா கேரியரில் ஒரு டர்னிங் பாயிண்டாக அமைந்தது. இதனைத் தொடர்ந்து வெங்கட் பிரபுவுக்கு மறுபடியும் அஜித்தை வைத்து ஒரு படம் எடுக்க வேண்டும் என்று நீண்ட நாள் ஆசையாகவே இருந்தது. அதற்காக ஒரு கதையை ரெடி பண்ணி அஜித்திடம் சொல்ல வேண்டும் என்பதற்கு பல வருடமாக காத்துக் கொண்டிருந்தார்.

Also read: தளபதி 68ல் அந்த விஷயத்திற்கு க்ரீன் சிக்னல் கொடுத்த விஜய்.. டபுள் ஹேப்பி மூடில் வெங்கட் பிரபு

இந்த விஷயம் அஜித்திற்கு தெரிந்தும் இவரை அலட்சியப்படுத்தும் விதமாக கடைசி வரை வெங்கட் பிரபுவை மீட் பண்ணுவதற்கு தயாராகவே இல்லை. பிறகு வெங்கட் பிரபுவுக்கு ஒரு கட்டத்தில் அஜித்துக்கு மங்காத்தா என்ற பெரிய ஹிட் படத்தைக் கொடுத்தும் அத்துடன் குடும்ப நண்பராக இருந்தும் ஏன் இப்படி நம்மளை உதாசீனப்படுத்தினார் என்று மிக வேதனையுடன் இருந்திருக்கிறார்.

இதனால் இந்த கதையை எப்படியாவது ரஜினியிடம் சொல்லி அவரை வைத்து படத்தை எடுக்க வேண்டும் என்று நினைத்தார். ஆனால் ரஜினி தொடர்ந்து மற்ற படங்களில் பிசியாகவே நடித்துக் கொண்டிருந்ததால் அவரிடம் கால் சீட் இவரால் வாங்க முடியவில்லை. கடைசியில் கடுப்பான வெங்கட் பிரபு மிகப்பெரிய ஆயுதமாக கையில் எடுத்ததுதான் விஜய்யின் தளபதி 68.

Also read: வெங்கட் பிரபுவுக்கு ஐஸ் வைத்த கீர்த்தி நடிகைகள்.. தளபதி ஓகே சொன்ன 3வது ஹீரோயின்

அஜித் மற்றும் ரஜினிக்காக எடுக்க நினைத்த படத்தை விஜய்யிடம் சொல்லி சம்மதத்தை வாங்கிக்கொண்டு தற்போது மிகப்பெரிய கஷ்டத்தில் இருந்து மீண்டு அதை சந்தோஷமாக மாற்றிக்கொண்டார். இதனால் அஜித்துக்கு பதில் அடி கொடுக்கும் விதமாக விஜய்யை வைத்து காய் நகர்த்துகிறார்.

தற்போது தளபதி 68 படத்தை எப்படியாவது மிகப்பெரிய ஹிட் படமாக்கி சாதனை படைக்க வேண்டும் என்று பயங்கர பிசியாக களத்தில் இறங்கி விட்டார். இதன் பிறகு அஜித், வெங்கட் பிரபுவை கூப்பிட்டால் கூட போக மாட்டார். அந்த அளவிற்கு ரொம்ப ஹேப்பியாக தளபதி 68ல் வேலை பார்த்து வருகிறார்.

Also read: 30 வயது வித்தியாசம், விஜய்க்கு ஜோடியாகும் விஜய் சேதுபதியின் மகள்.. இளசாக பிடிச்சுட்டு வந்த வெங்கட் பிரபு

Continue Reading
To Top