Tamil Cinema Gossips | சினிமா கிசுகிசு | Tamil Cinema KisuKisu
வாத்தியாராக நடித்துள்ள டாப் நடிகரின் படத்தில் புது குழப்பம்.. முடிவு செய்ய முடியாமல் தடுமாறும் தயாரிப்பு நிறுவனம்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தான் அந்த டாப் நடிகர். வழக்கமாக அரசியல்வாதிகளால் தான் அந்த நடிகரின் படங்களுக்கு பிரச்சனை வரும்.
ஆனால் இந்த முறை புதுவிதமாக சூழ்நிலை காரணமாக அவருடைய புதுப்படம் ஒன்று வெளியாக முடியாமல் தடுமாறிக் கொண்டிருக்கிறது. இதனால் நடிகர் முதல் இயக்குனர் அவரை அனைவரும் அப்செட்.
போகிற போக்கை பார்த்தால் படம் தியேட்டரில் வெளியாகாது என்பது தெள்ளத் தெளிவாகத் தெரிந்து விட்டதாம். அதனால்தான் இன்னொரு முன்னணி நடிகர் தன்னுடைய படத்தை OTT தளத்துக்கு கொடுத்தார்.
இப்போது இந்த தயாரிப்பாளருக்கும் அந்த ஐடியா வந்துவிட்டதாம். ஆனால் டாப் நடிகர் குறுக்க புகுந்து கட்டையை போட்டதால் இவ்வளவு நாட்களாக படத்தை எப்படி வெளியிடுவது என தெரியாமல் விழித்துக் கொண்டிருந்தார்களாம்.
ஆனால் தற்போது முன்னணி OTT நிறுவனத்துடன் மல்லுக்கட்டி கொண்டிருக்கிறாராம் தயாரிப்பாளர். அவர்கள் 100 கேட்க, கூட 20 இவர்கள் கேட்க பேரம் இழுத்துக் கொண்டே செல்வதால் தான் தற்போது வரை படத்தை பற்றி எந்த ஒரு அறிவிப்பும் வெளிவிடாமல் வைத்திருக்கிறார்களாம்.
பண்டிகை வரை பார்க்கலாம், இல்லையென்றால் படத்தை கொடுத்து விடலாம் என டாப் நடிகர் கிரீன் சிக்னல் கொடுத்து விட்டாராம். ஒரு பேச்சுக்கு சொன்னது தான், உடனடியாக தயாரிப்பாளர் படத்தின் விலையை கிட்டத்தட்ட பேசி முடித்துவிட்டாராம்.
தியேட்டரில் வெளியானால் என்னதான் நல்ல படமாக இருந்தாலும் கொஞ்சமாவது நஷ்டத்தை கொடுக்க அதிக வாய்ப்பிருக்கிறது என்பதால் தயாரிப்பாளர் டாப் நடிகரின் மண்டையை கழுவி இந்த OTT ரிலீஸுக்கு ஒத்துக்கொள்ள வைத்தாராம்.
தமிழ் ராக்கர்ஸ் படத்தை ஆடையை போட்டு வெளிவருவதற்குள் நம்மாலே முடித்து வைத்திருக்கும் படத்தை முறையான விலைக்கு விற்று பெயரை காப்பாற்றிக் கொள்ளலாம் என தயாரிப்பாளர் பாடுபட்டு வருகிறாராம்.
தற்போது தியேட்டர்கள் திறக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதால் படத்தை தியேட்டரில் வெளியிடலாமா அல்லது OTT தளத்திற்கு கொடுத்து விடலாமா என புது சிக்கல் ஏற்பட்டுள்ளதாம்.
