சிறுவயதில் நம்மளை மிரட்டிய 8 பேய் படங்கள்.. இன்று வரை 13னை பார்த்து அலறும் மக்கள்

ஹாலிவுட் திரைப்படங்களை மிஞ்சும் அளவுக்கு 80, 90-களில் வெளியான ஒரு சில தமிழ் திரைப்படங்கள் திகிலூட்டுபவையாக இருக்கும். அதுவும் சில படங்களை 18 வயதிற்கு கம்மியாக இருக்கும் நபர்கள் பார்க்க வேண்டாம் என்றும் குறிப்பிடப்பட்டிருக்கும்.

13ஆம் நம்பர் வீடு: 1990 ஆம் ஆண்டு வெளியான இந்தப் படத்தில் கூட்டு குடும்பத்துடன் வாழும் அண்ணன் தம்பிகள் 13-ம் என்னுடைய வீட்டிற்கு குடி போகின்றனர். அந்த வீட்டிற்கு போன பிறகு மர்மமான முறையில் அண்ணன் இறக்க, திகிலூட்டும் சம்பவம் அரங்கேறுகிறது. ஏனென்றால் அக்குடும்பத்தைச் சேர்ந்த முன்னோ,ர் ஒரு பெண்ணின் சாவுக்கு காரணமாய் இருந்ததால், அந்த குடும்பத்தை சேர்ந்த ஆண்களை பழி வாங்குகிறது. அதன்பிறகு தெய்வ சக்தியால் அந்த ஆவியை சாந்தபடுத்துவது தான் இந்த படத்தின் கதை.

ராசாத்தி வரும் நாள்: 1991 ஆண்டு நிழல்கள் ரவி, கஸ்தூரி, நாசர், ராதாரவி உள்ளிட்டோர் நடித்த இந்த படத்தில் கஸ்தூரி மற்றும் காவல்துறையில் பணிபுரியும் நிலை நிழல்கள் ரவி இருவருக்கும் திருமணம் நடக்கும் ஏற்கனவே 19 ஆண்டுகளுக்கு முன்பு பாலியல் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு இறந்த பெண் ராசாத்தி உடைய ஆவி கஸ்தூரி மீது புகுந்துவிடும் எனவே தன்னுடைய மனைவியை அந்த ஆவியிடம் இருந்து காப்பாற்றி காவல் அதிகாரியான நிழல்கள் ரவி எடுக்கும் முயற்சி தான் இந்த படத்தின் கதை.

மைடியர் லிசா:  1987ஆம் ஆண்டு வெளியான இந்த படம் மலையாளத்தில் வெளியான சூப்பர் ஹிட் படத்தின் ரீமேக் ஆகும். இதில் வெளிநாட்டில் படித்த கதாநாயகன் தன்னுடைய காதலியுடன் சொந்த நாட்டிற்கு திரும்புகிறான். அவர்கள் ஒரு எஸ்டேட் பங்களாவில் தங்கும்போது, காதலி லிசா கற்பழிப்பு கொல்லப்படுகிறாள். பிறகு கதாநாயகனின் மனதை மாற்ற சாதுவான பெண்ணை திருமணம் செய்து வைக்கின்றனர். அதன் பிறகு திருமணமான பெண்ணின் உடம்பில் லிசா ஆவி புகுந்து, தன்னை கொன்றவர்களை பழி வாங்குகிறது. பின் மந்திரவாதியின் உதவியுடன் லிசாவின் ஆவியை மனைவியின் உடம்பிலிருந்து வெளியேற்றுகின்றனர்.

ஜென்ம நட்சத்திரம்: 1991ஆம் ஆண்டு வெளிவந்த இந்தப்படத்தில் ஒரு குழந்தையும், குழந்தையை பாத்துக்க இருக்கும் வேலைக்காரியும் செய்யும் அமானுஷ்ய வேலைகள் இந்தப் படத்தில் படுபயங்கரமாக காட்டப்பட்டிருக்கும். மேலும் இந்த குழந்தை தன்னை வளர்த்த பெற்றோர்களையும் அழித்துவிட்டு புதிய உறவினர்களுடன் செல்லும் கடைசியில் இந்த குழந்தை சாத்தான் குழந்தை என முத்திரை குத்தி அழிக்கப்பட்டு படம் நிறைவடையும். இப்படத்தின் கதை தி ஓமன் என்னும் ஆங்கிலப் படத்தின் தழுவல்.

அதிசய மனிதன்: 1990ல் வெளிவந்த இந்தப் படத்தில் கவுதமி தன்னுடைய நண்பர்களுடன் ஒரு காட்டு பங்களாவில் தங்கியிருப்பார் அங்கு விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்ட அழிக்க முடியாத மனிதன் வெறி கொண்டு கௌதமியின் நம்பர் நண்பர்களை ஒருவர் பின் ஒருவராக கொலை செய்கிறான் பிறகு சிறப்பு போலீஸ் அதிகாரி நிழல்கள் ரவியின் உதவியுடன் லேசர் துப்பாக்கியில் அந்த மனிதன் அழிக்கப்படுவது தான் இந்தப்படத்தின் கதை.

வா அருகில் வா: 1991 ஆம் ஆண்டு வெளிவந்த இந்த படம் திகில் படம் பார்க்கும் ஆர்வமுள்ளவர்களுக்கு இந்த படம் ஒரு வரபிரசாதம். இதில் கதாநாயகியின் அமானுஷ்ய சக்தியால் அவள் படும் துன்ப துயரங்கள் அனைத்தும் திகிலோடு செல்லப்படுகிறது. மேலும் அவளை ஆட்டிப்படைக்கும் தீய சக்திகளால் அவள் செய்யும் கொலைகள் மற்றும் அதிலிருந்து அவன் எப்படி மீண்டு வருகிறாரா இல்லையா என்பது தான் இந்த படத்தில் சொல்ல இருக்கும் கதை.

யார்: 1985ஆம் ஆண்டு அமானுஷ நேரத்தில் பிறந்த குழந்தை பிறந்ததும் தாய் இறந்துவிட, அந்த குழந்தையை பணக்காரர் ஒருவர் தத்தெடுத்து வளர்த்தார். சாதாரணமாக இருந்த அந்த குழந்தை, கல்லூரிப் பருவத்தில் விசித்திரமான செயலில் ஈடுபடுவதால், சாத்தானின் மகன் என தெரிய வருகிறது. எனவே அதை அறிந்த நளினி, அர்ஜுன் இருவரும் போராடி சாத்தானின் செயலை முறியடிக்க முயற்சிக்கின்றனர்.

உருவம்: 1991ஆம் ஆண்டு வயது வந்தோர் மட்டுமே பார்க்கக்கூடிய திரைப்படமாக வெளிவந்த இந்த படத்தில் மோகன், பல்லவி உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருப்பார்கள். குலை நடுங்க வைக்கும் இந்தப்படத்தில் கர்ப்பமாக இருக்கும் பெண்ணை சொத்துக்காக கொலை செய்கின்றனர். பின்பு அவள் வேறு ஒருவனுடன் ஓடி விட்டார் என்ற பட்டமும் கட்டி விடுகின்றனர். இதை நம்பி அவளுடைய கணவரு,ம் மனைவியை வெறுத்து வேறு ஒரு பெண்ணை மறுமணம் செய்கிறான். அதன்பிறகு முதல் மனைவியின் ஆவி ஒரு பொம்மையில் புகுந்து, தன் மீது பொய் பழி சுமத்தியவர்களை வரிசையாக கொன்று பழி வாங்குகிறது. தன் மீது சந்தேகப்பட்ட கணவனையும் பழிவாங்க முயற்சிக்கையில் இரண்டாவது மனைவியின் தெய்வ சக்தியால் அளிக்கப்பட்டு தெய்வத்தின் காலடியில் சேர்ந்துவிடுகிறது.

Next Story

- Advertisement -