உண்மை காதலை இளசுகளின் மனதில் விதைத்த 7 படங்கள்.. உயிரைக் கொடுத்து நிரூபித்த பருத்திவீரன்

வணக்கம் சினிமாபேட்டை வாசகர்களே! நமது சினிமாபேட்டை வலைதளம் வாயிலாக பல சுவாரசியமான சினிமா செய்திகளை தொடர்ந்து கண்டு வருகிறோம். இன்றைய வரிசையில் தமிழ் சினிமாவின் சோக முடிவுகளை கொண்ட காதல் படங்களை காணலாம். இந்த படங்கள் எல்லாம் காலத்தை கடந்து நிற்பதற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை.

மூன்றாம் பிறை: தமிழ் சினிமாவின் ஆகச்சிறந்த திரைப்படங்களில் ஒன்றான மூன்றாம் பிறை படத்தை பாலு மகேந்திரா இயக்கி இருந்தார். இந்த படத்தில் அவருக்கு மிகவும் விருப்பமான கமல் – ஸ்ரீதேவி காம்போ. போதாத குறைக்கு அவருக்கு பிடித்த சில்க் ஸ்மிதா வேற. ஆனால் நாம் எதிர்பார்ப்பது போன்ற ஒரு படத்தை கொடுக்காமல். காலத்தால் மறக்க முடியாத ஒரு படத்தை கொடுத்தார் இயக்குனர். குழந்தையாக இருக்கும் குமரியிடம் காதலை தாண்டி ஓர் பாசத்தை காட்டுகிறார் நாயகன். அந்த குழந்தை திடீரென்று குமரி ஆகி, பழசை மறந்தால் என்ன நடக்கும்? இந்த கேள்விக்கான பதிலாக வலி நிறைந்த இந்த படம் கிடைத்தது.

குணா: கமல் ஹாசன் ரோஷினி இணைந்து நடித்த திரைப்படம் குணா. இந்த திரைப்படத்தில் வசதியான வீட்டுப் பெண்ணை கடத்தி சென்று விடும் கதாபாத்திரத்தில் நடித்தார் கமல். ஆரம்பத்தில் கமலை வெறுத்து பின்பு அவர் காதலில் மயங்கி அவரை காதலிக்கும் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் அறிமுக நடிகையான ரோஷினி. மக்களுக்கு அந்த காலத்தில் அவ்வளவாகப் பிடிக்காத இந்த திரைப்படம் தோல்வியை தழுவிய காரணத்தாலோ என்னவோ தெரியவில்லை ரோஷினி அதன்பிறகு திரைப்படங்களில் பார்க்க இயலவில்லை. கமலின் நண்பரான சந்தானபாரதி இந்த படத்தை இயக்கி இருந்தார். உன்னதமான இசையை இந்த படத்துக்காக கொடுத்தார் இளையராஜா

புன்னகை மன்னன்: நமது வரிசையில் அடுத்தும் ஓர் கமல் திரைப்படம். இந்த முறை அவரது குருநாதர் கே.பி. அவர்களின் படம். காதலுக்கு எதிர்ப்பு, தற்கொலை முயற்சி, அதில் காதலி மட்டும் இறந்துவிட, காதலன் மீண்டும் காதலில் விழுந்தால் என்னவாகும் என்ற இந்த கேள்விக்கு இந்த படம் பதில் சொல்கிறது. இந்த படத்தின் இறுதி காட்சி பலருக்கு அதிர்ச்சி தரலாம். அந்த அளவுக்கு யாரும் யூகிக்க முடியாதவாறு இருந்தது. இந்த படத்திற்கும் இசை, இளையராஜா. பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட்.

சேது: பாலா அவர்கள் சேது படம் மூலமாக இயக்குனர் ஆனார். பாலுமகேந்திராவின் பராமரிப்பில் வளர்ந்தவர் என்பதால் குருவின் வாடை அவரது படத்திலும் இருந்தது. இந்த படத்தில் விக்ரம், அபிதா, ஸ்ரீமன், சிவகுமார் மற்றும் பலர் நடித்திருந்தனர். காதல் இனிக்கும் நேரத்தில் விதி நம்மை வேறுமாதிரி ஒரு நிலைக்கு கொண்டு சென்றால் என்னவாகும் என்பதே இந்த படத்தின் கதை. கனத்த மனது இருந்தால் மட்டும் இந்த படத்தை பார்க்கலாம். இந்த படத்திற்கும் தனது இசையால் முழு உழைப்பை கொடுத்திருந்தார் இளையராஜா.

காதல்: பாலாஜி சக்திவேல், இந்த படத்தின் மூலம் இயக்குனர் ஆனார். இவர் இயக்கிய முதல் திரைப்படமான காதலில் பரத், சந்தியா நடித்திருந்தார்கள். மதுரையில் மெக்கானிக்காக வேலைபார்க்கும் பரத், பள்ளி செல்லும் சந்தியா மீது காதல் கொண்டு, அவருடன் சென்னைக்கு வந்து விடுகிறார்கள். அதன் பிறகு அவரது குடும்பம் சமாதானம் பேசி அழைத்துக்கொண்டு போக, மீதி கதையை வலி நிறைந்து சொல்லி இருந்தார் இயக்குனர். இந்த படம் ஓர் உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டது. இந்த படத்தில் பரத் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்

பருத்திவீரன்: கார்த்தி நடிகராக அறிமுகமான இந்த படத்தை அமீர் சுல்தான் இயக்கி இருந்தார். மாமன் பொண்ணை விரும்பும் வேலை வெட்டி இல்லாத இளைஞர் ஒருவனுக்கு முன்னர் செய்த பாவம் பின்னர் வந்து தாக்கும் கர்மாவை மையமாக கொண்ட கதை தான் இந்த படம். இந்த படத்திற்கு இசை யுவன் சங்கர் ராஜா. பாடல்கள் எல்லாம் மாபெரும் ஹிட். மதுரை மண்ணின் வாசம் மாறாமல் எடுக்கப்பட்ட திரைப்படம் என்றால் அது மிகை இல்லை.

விண்ணைத்தாண்டி வருவாயா: கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கிய இந்த படத்தில் சிம்பு – த்ரிஷா ஜோடியாக நடித்திருந்தார்கள். ஏ. ஆர். ரகுமான் இசை அமைத்திருந்தார். பாடல்கள் எல்லாம் சூப்பர் ஹிட். தந்து வீட்டிற்கு குடிவரும் கிருத்துவப்பெண்ணை காதலிக்கிறார் நாயகன். அவளை நிச்சயம் கரம் பிடிக்க வேண்டும் அவர் படும் அல்லல்கள் பார்த்து நமக்கு கண்களில் நீர் வரும். இறுதியில் அவர்களது காதல் என்னவானது, நாயகன் என்ன ஆனார் என்றெல்லாம் சோகமான ஒரு முடிவை சொல்கிறது இந்த திரைப்படம். சிம்பு வாழ்க்கையில் முக்கியமான படமாக இது பார்க்கப்படுகிறது.

96: பிரேம்குமார் இந்த படத்தை இயக்கி இருந்தார். இளையராஜா பாடல்களை கையாண்ட விதம் நமக்கு நாஸ்டால்ஜியா உணர்வை கொடுத்தது கோவிந்த் வசந்தா இந்த படத்திற்கு இசை அமைத்திருந்தார். தொண்ணூறுகளில் பள்ளியில் படித்த காலகட்டத்தில் இருப்பவர்களுக்கு மிகவும் பிடித்த சினிமாவாக இந்த படம் சமீபத்தில் வெளிவந்தது. கதைப்படி பள்ளியில் ஒருவர் மேல் ஒருவர் கொள்ளும் விவரம் அறியா காதல் எப்படி பிரிந்து பின்னாளில் தனித்தனியே பயணம் செய்து மீண்டும் ஒருநாள் சந்திக்கின்றனர் என்பதை உணர்வுபூர்வமாக கூறியிருந்த படமாக இருந்தது. விஜய் சேதுபதி, திரிஷா நடித்திருந்த இந்த படத்தின் கிளைமாக்ஸ் நிச்சயம் வலி நிறைந்த, மனநிறைவை கொடுத்தது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்