மக்கள் கொண்டாடிய ஜெயம் ரவியின் 7 படங்கள்.. அண்ணன் இயக்கத்தில் பட்டையை கிளப்பிய 4 படங்கள்

ஜெயம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் ரவி. இவர் முதல் படமே மிகப் பெரிய வெற்றியடைய அதிலிருந்து ஜெயம்ரவி என அழைக்கப்பட்டார். மேலும் தனது அண்ணன் ஜெயம் ராஜா இயக்கத்தில் ஜெயம்ரவி நிறைய படங்கள் நடித்துள்ளார். மேலும் ஜெயம் ரவி நடிப்பில் ரசிகர்களை கவர்ந்த சிறந்த 7 படங்களை பார்க்கலாம்.

ஜெயம் : மோகன் ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி, சதா மற்றும் பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் ஜெயம். இப்படம் காதல் கலந்த அதிரடி படமாக இருந்தது. அறிமுகப் படத்திலேயே தனது அசாத்தியமான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார் ஜெயம் ரவி. மேலும் இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது.

எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி : மோகன் ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி, அசின், நதியா, பிரகாஷ்ராஜ் மற்றும் பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் எம் குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி. இப்படத்தில் காதல், செண்டிமென்ட், ஆக்ஷன் என அனைத்தும் இருந்தது. மேலும் ஜெயம் ரவிக்கு இப்படம் மிகப்பெரிய பெயரை வாங்கி கொடுத்தது.

உனக்கும் எனக்கும் : மோகன் ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி, த்ரிஷா, பிரபு, பாக்யராஜ் மற்றும் பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் உனக்கும் எனக்கும். காதலுக்காக எதையும் செய்யும் சந்தோஷ் கதாபாத்திரத்தில் ஜெயம்ரவி நடித்திருந்தார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று ஹிட்டானது.

பேராண்மை : எஸ்பி ஜனநாதன் இயக்கத்தில் ஜெயம்ரவி, ஊர்வசி, பொன்வண்ணன் மற்றும் பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் பேராண்மை. பழங்குடியினர் நலனுக்காக உழைத்த வரும் வனக்காவலர் ஐந்து பெண்களுடன் நாட்டுக்கு வர இருக்கும் தீமையை எவ்வாறு அளிக்கிறார் என்பதை படத்தின் கதை.

நிமிர்ந்து நில் : சமுத்திரக்கனி இயக்கத்தில் ஜெயம் ரவி, அமலா பால், சூரி மற்றும் பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் நிமிர்ந்து நில். லஞ்சம் வாங்கும் அரசு அதிகாரிகளுக்கு சரியான பதிலடி கொடுக்கும் படமாக நிமிர்ந்து நில் படம் வெளியானது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றிருந்தது.

தனி ஒருவன் : மோகன் ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி, அரவிந்த் சாமி, நயன்தாரா மற்றும் பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் தனி ஒருவன். இப்படத்தில் போலீஸ் அதிகாரி மித்ரனாக ஜெயம் ரவி தன்னுடைய சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். மேலும் இப்படம் அவருக்கு நல்ல பெயரை வாங்கிக் கொடுத்தது.

அடங்கமறு : கார்த்திக் தங்கவேல் இயக்கத்தில் ஜெயம் ரவி, ராஷி கண்ணா மற்றும் பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் அடங்க மரு. இப்படத்தில் சப்-இன்ஸ்பெக்டர் சுபாஷ் ஆக ஜெயம் ரவி நடித்து இருந்தார். இப்படம் விமர்சன ரீதியாகவும், வணிக ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றி பெற்றது.

Next Story

- Advertisement -