டிஆர்பி யில் பட்டையை கிளப்பும் டாப் 6 சீரியல்கள்..ஆட்ட நாயகனை பின்னுக்கு தள்ளி விட்ட இடத்தை பிடித்த சன் டிவி

Top 6 Serials: சின்னத்திரை பொருத்தவரை எந்த சீரியல் மக்களுக்கு ரொம்பவே பிடித்தமான சீரியல் என்றும், எந்த சீரியலுக்கு தொடர்ந்து ஆதரவு அளித்து வருகிறார்கள் என்பதையும் அந்த வார இறுதியில் வெளியாகும் டிஆர்பி ரேட்டிங் படி தெரிந்துகொள்ளலாம். அந்த வகையில் இந்த வார சீரியல் டிஆர்பி ரேட்டிங்கில் பட்டைய கிளப்பும் டாப் 6 சீரியல்களைப் பற்றி பார்ப்போம்.

மல்லி: இந்த நாடகம் ஆரம்பித்ததிலிருந்து நூறாவது எபிசோடு தாண்டி இருக்கிறது. அந்த வகையில் டிஆர்பி ரேட்டிங்கில் 7.44 புள்ளிகளை பெற்று தொடர்ந்து ஆறாவது இடத்தை தக்க வைத்துக் வருகிறது.இதில் வெண்பாவிற்காக விஜய் அம்மாவாக மல்லியை மனைவியாக நடிக்க வைத்தார். ஆனால் வெண்பா மற்றும் மல்லியின் அன்புக்கு ஈடு இல்லை என்று சொல்வதற்கு ஏற்ப அதிக பாசம் ஏற்பட்டு விட்டதால் இவர்களுக்கு உண்மையிலேயே கல்யாணத்தை பண்ணி வைக்கலாம் என்று விஜய் குடும்பத்தில் முடிவு பண்ணி விட்டார்கள். ஆனால் இதை தடுக்கும் விதமாக கதிரேசன் சதி பண்ணி வருகிறார்.

சாதுமிரண்டால் காடு கொள்ளாது என்று நிரூபித்த ஆனந்த்

வானத்தைப்போல: கிட்டத்தட்ட 1100 எபிசோடு தாண்டிய நிலையில் இந்த வார டிஆர்பி ரேட்டிங்கில் 7.65 புள்ளிகளைப் பெற்று ஐந்தாவது இடத்தில் இருக்கிறது. அண்ணன் தங்கை பாசத்தை வைத்து கொண்டு வந்த கதையில் பொன்னி வில்லியாக பல ஆட்டத்தை ஆடியதில் தற்போது அனைத்துக்கும் முடிவு கட்டும் விதமாக ஆகஸ்ட் 17ஆம் தேதி முடிப்பதற்கு நாள் குறித்து விட்டார்கள். அல்லது இன்னும் ஒரு சில நாட்களில் இந்த நாடகத்திற்கு பதிலாக வேற ஒரு புது நாடகம் வரப்போகிறது.

மருமகள்: டிஆர்பி ரேட்டிங்கில் 8.27 புள்ளிகளைப் பெற்று இந்த வாரம் நான்காவது இடத்தில் இருக்கிறது. டாம் அண்ட் ஜெர்ரி ஆக சண்டை போட்டு வரும் பிரபு மற்றும் ஆதிரைக்கு கல்யாணம் நடத்தும் விதமாக குடும்பத்துடன் முடிவு பண்ணி விட்டார்கள். அந்த வகையில் ஆதிரையை பொண்ணு பார்ப்பதற்காக பிரபு வந்திருக்கிறார். அப்பொழுதுதான் இருவருமே பார்த்து அதிர்ச்சியாக போகிறார்கள். ஆனாலும் குடும்ப சூழ்நிலை காரணமாக இருவரும் கல்யாணம் பண்ணிக் கொண்டு அதன்பின் புரிந்து மனம் ஒத்தும் தம்பதிகளாக வாழப் போகிறார்கள்.

கயல்: இந்த வாரம் 8.76 புள்ளிகளைப் பெற்று மூன்றாவது இடத்தில் இருக்கிறது. ஜாதகம் சிவசங்கரி பிரச்சனையால் துவண்டு போய் இருந்த கயல், தற்போது எந்த காரணத்தை கொண்டும் யாருக்காகவும் எழிலை விட்டுக் கொடுக்க மாட்டேன் என்று முடிவு பண்ணி விட்டார். அதே நேரத்தில் பெரியப்பா சதி பண்ணி மூர்த்தியிடம் வாங்கிய கையெழுத்தை சுக்கு நூறாக உடைக்கும் விதமாக கயல் பெரியப்பாவுக்கு மிகப்பெரிய டுவிஸ்ட் வைத்து விட்டார்.

சிறகடிக்கும் ஆசை: விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் இந்த ஒரு சீரியல் கடந்த சில வாரங்களாக முதல் இடத்தை பிடித்திருந்தது. ஆனால் இந்த வாரத்தில் 8.86 புள்ளிகளை பெற்று இரண்டாவது இடத்திற்கு போய்விட்டது. ரோகிணி எப்படியாவது கர்ப்பமாகி விட வேண்டும் என்று முயற்சி எடுத்து வருகிறார். ஏனென்றால் அப்போதுதான் மனோஜ் மற்றும் அந்த குடும்பத்திலிருந்து நமக்கு ஒரு நிறைவான வாழ்க்கை கிடைக்கும் என்று பிளான் பண்ணி காய் நகர்த்துகிறார். ஆனால் இதுவரை ரோகிணி பற்றி விஷயங்கள் யாரும் கண்டு பிடிக்காத வகையில் கமுக்கமாக ஏமாற்றி வருகிறார்.

சிங்கப் பெண்ணே: விட்ட இடத்தை பிடிக்கும் விதமாக இந்த வாரம் முதல் இடத்தை தக்க வைத்துக் கொண்டது. அந்த வகையில் டிஆர்பி ரேட்டிங்கில் 9.11 புள்ளிகளை பெற்றிருக்கிறது. சாதுமிரண்டால் காடு கொள்ளாது என்று சொல்வதற்கு ஏற்ப அடங்கிப் போயிருந்த ஆனந்தி மானத்திற்கு ஏற்பட்ட கலங்கத்தை துடைக்கும் விதமாக மித்ரா மற்றும் கருணாகரனுக்கு திருப்பி பதிலடி கொடுத்துவிட்டார். தற்போது ஒட்டுமொத்தமாக சேர்ந்து ஆனந்தி கிராமத்துக்கு சென்று திருவிழா நிகழ்ச்சியை கலகட்ட போகிறார்கள்.

Next Story

- Advertisement -