வியாழக்கிழமை, பிப்ரவரி 13, 2025

அஜித்தின் மார்க்கெட்டை தவிடுபொடியாக்கிய 6 படங்கள்.. ரசிகர்களையே ஓடவிட்ட பிளாப் மூவீஸ்

தமிழ் சினிமாவில் அதிக ரசிகர் பட்டாளத்தை வைத்து இருப்பவர் நடிகர் அஜித். இவர் ரசிகர்களுக்கு ஏதாவது செய்யவேண்டும், அவர்களுக்காகவே நிறைய பஞ்ச் டயலாக் வேணும், மாஸ் சீன்கள் வைக்க வேண்டுமென நிறைய படங்களை எடுத்துள்ளார். ஆனால் அந்த படங்கள் எல்லாமே தோல்வியை சந்தித்தது. அவற்றில் படு மோசமான தோல்வியை சந்தித்த 6 படங்களை பார்க்கலாம்.

ரெட் : சிங்கம்புலி இயக்கத்தில் அஜித் நடிப்பில் 2002ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ரெட். அஜித்தை ஆக்சன் பாதைக்குத் மாற்றிய தீனா, அமர்க்களம் படம் மிகப்பெரிய ஹிட் கொடுத்தது. ஆனால் ரெட் படம் ரசிகர்களை முழுமையாக திருப்தி படுத்தாமல் போக மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது.

ஜனா : 2004 ஆம் ஆண்டு அஜித், சினேகா, ரகுவரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வெளியான திரைப்படம் ஜனா. இப்படமும் ஆக்ஷன் படமாக வெளியானது. ஆனால் இப்படத்தின் கதைக்களம் சுவாரசியம் குறைவாக உள்ளதால் ரசிகர்களை கவரவில்லை. அஜித்தின் ஜனா படமும் படுதோல்வியை சந்தித்தது.

ஜி: லிங்குசாமி இயக்கத்தில் அஜித், திரிஷா மற்றும் பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் ஜி. இப்படம் பழைய படங்களின் கதையை எடுக்கப்பட்டிருந்தது என ரசிகர்களுக்கு அலுப்பை ஏற்படுத்தி இருந்தது. அதுவும் லிங்குசாமி போன்ற இயக்குனரிடம் இருந்து இது போன்ற பழைய கதை எடுத்திருப்பது ரசிகர்களுக்கு அதிருப்தியை உண்டாக்கியது.

ஆஞ்சநேயா : அஜித், மீராஜாஸ்மின், ரகுவரன் மற்றும் பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் ஆஞ்சநேயா. இப்படத்தை மகாராஜன் இயக்கியிருந்தார். இப்படத்தில் அஜீத் ஏசிபி பரமகுரு கதாபாத்திரத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார். ஆஞ்சநேயா படம் அஜித்தின் படங்களில் படு தோல்வியை அடைந்தது.

பரமசிவன் : பி வாசு இயக்கத்தில் அஜித், லைலா, நாசர் பிரகாஷ்ராஜ் விவேக் மற்றும் பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் பரமசிவன். இப்படத்திற்கு வித்யாசாகர் இசையமைத்திருந்தார். பரமசிவன் படம் ஆக்ஷன் படமாக இருந்தாலும் அஜித் ரசிகர்களுக்கு இப்படம் பெரிய அளவில் கவரவில்லை. இதனால் இப்படம் தோல்வியை சந்தித்தது.

அசல் : சரண் இயக்கத்தில் அஜித், சமீரா ரெட்டி, பாவனா, பிரபு மற்றும் பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் அசல். இப்படம் ஆக்ஷன் கலந்த குடும்ப கதையாக இருந்தது. இப்படத்தில் அப்பா, மகன் என அஜித் இரட்டை வேடத்தில் நடித்திருந்தார். அசல் படமும் அஜித்தின் திரை வாழ்க்கையில் மிக மோசமான தோல்வியை அடைந்தது.

Trending News