லெஜெண்ட் அப்பாக்களின் ஜொலிக்காத 5 வாரிசுகள்.. சிபாரிசு மட்டும் போதுமா திறமையும் வேணும்

சினிமாவில், வாரிசு நடிகர்கள் வருவது மிகவும் சுலபமான ஒன்றுதான். தங்களது தந்தையின் செல்வாக்கு மூலம் அவர்கள் சுலபமாக படங்களில் நடிக்க வந்துவிடுகிறார்கள். ஆனால் அவர்கள் சினிமாவில் நீடிப்பது ரசிகர்கள் கையில்தான் உள்ளது.

சொல்லப்போனால் தளபதி விஜய் அவருடைய தந்தையால் தான் சினிமாவுக்குள் நுழைந்தார். ஆனால் தற்போது எட்டமுடியாத உயரத்தில் இருப்பதற்கு அவருடைய கடின உழைப்பே முக்கிய காரணம். இந்நிலையில் லெஜண்ட்களின் வாரிசுகளான 5 நடிகர்கள் ஜெயிக்க முடியாமல் உள்ளனர்.

பி வாசு – சக்தி : பல நடிகர்களை தமிழ் சினிமாவில் உருவாக்கியவர் இயக்குனர் பி வாசு. இவருடைய படங்கள் எல்லாம் வணிக ரீதியாக மிகப்பெரிய வெற்றியடைந்த பிளாக்பஸ்டர் ஹிட் ஆகும். இவருடைய மகன் சக்தி தொட்டால் பூ மலரும் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். தொடர்ந்து பல ப்ளாப் படங்கள் கொடுத்து வந்தார். அதன் பிறகு சில சர்ச்சைகளிலும் சிக்கினார். மீண்டும் நடிக்க வேண்டும் என்ற ஆசையில் பிக்பாஸில் கலந்து கொண்டார். இதுவும் ஏமாற்றத்தையே தான் தந்தது.

பாரதிராஜா – மனோஜ் : கிராமத்தின் சாயலை அப்படியே கண் கொண்டு வந்தவர் பாரதிராஜா. இயக்குனர் சிகரம், இயக்குனர் இமயம் என ரசிகர்களால் போற்றப்படும் பாரதிராஜாவின் மகன் நடிகர் மனோஜ். இவர் ஆரம்பத்தில் தனது தந்தை இயக்கத்தில் உருவான படத்தில் நடித்து வந்தார். ஆனாலும் ஒரு ஹீரோ என்ற அங்கீகாரம் அவருக்கு கிடைக்கவில்லை.

எஸ் வி சேகர்- அஸ்வின் : இயக்குனர், நடிகர் என அனைவராலும் அறியப்படுபவர் எஸ் வி சேகர். ஆரம்பத்தில் பல நாடகங்களில் நடித்த இவருக்கு திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதை சரியாக பயன்படுத்திக் கொண்ட எஸ்வி சேகர் பல படங்களில் நடித்து அனைவராலும் அறியப்பட்டார். தற்போது அரசியலிலும் ஈடுபட்டு வருகிறார். இவருடைய மகன் அஸ்வின் சேகர் மூன்று படங்கள் நடித்தார். அது ஒரு படம் கூட சொல்லிக்கொள்ளும் அளவுக்கு போகவில்லை.

கே பாக்யராஜ் – சாந்தனு : நடனத்தை தவிர சினிமாவின் அனைத்து வித்தையும் கற்றவர் கே பாக்யராஜ். சினிமாவில் அவருடைய பங்கு அத்தகையது. நடிகர், திரைக்கதை அமைப்பாளர், இயக்குனர், தயாரிப்பாளர், வசன எழுத்தாளர் என அனைத்தையும் கற்று வைத்துள்ளார். அவருடைய வாரிசான சாந்தனு பாக்யராஜ் சக்கரகட்டி படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். இவருடைய நடனம் பலராலும் கவரப்பட்டது. ஆனால் தற்போது வரை சினிமாவில் ஒரு நிரந்தர இடத்திற்காக போராடி வருகிறார்.

பாண்டியராஜன்- பிரித்விராஜன் : ஹீரோக்கு உண்டான அம்சங்கள் எதுவும் இல்லை என்றாலும் தன்னம்பிக்கையால் கதாநாயகனாக வலம் வந்தவர் பாண்டியராஜன். மேலும் இயக்குனராகவும் பல வெற்றிப் படங்களை கொடுத்துள்ளார். இவருடைய மகன் பிரிதிவிராஜன் தனது தந்தை இயக்கத்தில் கை வந்த கலை படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து பல படங்கள் நடித்தாலும் அனைத்தும் தோல்வியையே சந்தித்தது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்