தியாகராஜன் இயக்கிய சிறந்த 5 படங்கள்.. பிரசாந்தை வைத்து ஹிட்டடித்த 2 படங்கள்

தமிழ் சினிமாவில் நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முகத் தன்மை கொண்டவர் தியாகராஜன். இவர் தமிழில் மட்டுமன்றி கன்னடா, தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். தனது மகன் பிரசாந்தை வைத்து பல படங்கள் இயக்கியுள்ளார். தியாகராஜன் இயக்கத்தில் வெளியான சிறந்த 5 படங்களை இப்போது பார்க்கலாம்.

பூவுக்குள் பூகம்பம் : தியாகராஜன் எழுதி, இயக்கி, தயாரித்து, நடித்த படம் பூவுக்குள் பூகம்பம். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக பார்வதி நடித்திருந்தார். மேலும், சரோஜாதேவி மற்றும் சரண்ராஜ் துணை வேடங்களில் நடித்திருந்தனர். இப்படத்தில் சங்கீதராஜன் இசையமைத்திருந்தார். பூவுக்குள் பூகம்பம் படம் அனைவரது பாராட்டையும் பெற்றது.

சேலம் விஷ்ணு : தியாகராஜன் எழுதி, இயக்கி, தயாரித்து, நடித்த மற்றொரு படம் சேலம் விஷ்ணு. இப்படத்தில் அவருக்கு ஜோடியாக ரூபினி நடித்திருந்தார். இப்படம் புதுடெல்லி என்ற மலையாளப் படத்தின் ரீமேக் ஆகும். இப்படத்திற்கும் சங்கீதராஜன் இசையமைத்திருந்தார். இப்படத்தில் தியாகராஜன் நடிப்பு வரவேற்கப்பட்டது.

ஆணழகன் : தியாகராஜன் இயக்கத்தில் பிரசாந்த், சுனேகா, வடிவேலு, சார்லி, சின்னி ஜெயந்த் ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் ஆணழகன். இப்படத்தில் பிரஷாந்த் வாடகை வீட்டில் இருக்கும் போது வீட்டின் உரிமையாளரை நம்ப வைப்பதற்காக பெண் வேடமிட்டு நடித்திருந்தார். இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார்.

ஷாக் : தியாகராஜன் இயக்கி, தயாரித்து இருந்த படம் ஷாக். இப்படத்தில் பிரஷாந்த் மற்றும் மீனா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர். இப்படம் ராம் கோபால் வர்மாவின் ஹிந்திப் படமான பூட்டின் ரீமேக்காகும். இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

மம்முட்டியான் : தியாகராஜன் இயக்கத்தில் பிரசாந்த், மீரா ஜாஸ்மின், பிரகாஷ் ராஜ், வடிவேலு மற்றும் பலர் நடிப்பில் 2011இல் வெளியான திரைப்படம் மம்முட்டியான். இப்படம் தியாகராஜன் நடிப்பில் 1983 இல் வெளியான மலையூர் மம்பட்டியான் படத்தின் ரீமேக் ஆகும். இப்படம் விமர்சன ரீதியாக மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருந்தது.

Next Story

- Advertisement -