இந்தியில் ரீமேக்காகும் 5 தமிழ் படங்கள்.. தரமான சம்பவம் செய்யும் லோகேஷ் கனகராஜ்

ஒரு காலகட்டத்தில் மற்ற மொழிப் படங்கள் தமிழில் ரீமேக் செய்து வெளியாகும். அந்தப் படங்கள் இங்குள்ள தயாரிப்பாளர்களுக்கு நல்ல லாபத்தையும் ஈட்டித் தரும். ஆனால் தற்போது தமிழில் உள்ள படங்கள் ஹிந்தியில் ரீமேக் ஆகி ட்ரெண்டை மாற்றி உள்ளது. அவ்வாறு தமிழில் எடுக்கப்பட்ட 5 படங்கள் ஹிந்தியில் ரீமேக் ஆக உள்ளது.

சூரரைப்போற்று : சுதா கொங்கரா இயக்கத்தில் உண்மை கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் சூரரைப்போற்று. இப்படத்தில் சூர்யா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படத்திற்கு சர்வதேச அளவில் அங்கீகாரம் கிடைத்தது. இந்நிலையில் இப்படத்தை சுதா கொங்கரா இந்தியில் இயக்கயுள்ளார். மேலும் இப்படத்தில் அக்ஷய்குமார் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்.

விக்ரம் வேதா : விஜய் சேதுபதி மற்றும் மாதவன் நடிப்பில் உருவான விக்ரம் வேதா படத்தை புஷ்கர், காயத்ரி இயக்கி இருந்தனர். தமிழில் மிகப் பெரிய வெற்றி பெற்ற படம் ஹிந்தியில் ரீமேக் ஆகிறது. இந்தப் படத்தில் விஜய் சேதுபதி கதாபாத்திரத்தில் ஹிரித்திக் ரோஷனும், மாதவன் கதாபாத்திரத்தில் சைஃப் அலிகானும் நடிக்கின்றனர்.

மாஸ்டர் : கடந்தாண்டு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் மாஸ்டர். இப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆகி வசூல் சாதனை படைத்தது. இந்நிலையில் மாஸ்டர் படம் ஹிந்தியில் ரீமேக் ஆக உள்ளது. இப்படத்தை செவன் கிரீன் ஸ்டுடியோஸ் தயாரிக்கிறது. இப்படத்தில் சல்மான்கான், ஷாகித்கபூர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

கைதி : லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான திரைப்படம் கைதி. ஒரே நாளில் நடக்கும் கதையை மையமாக வைத்து இப்படம் எடுக்கப்பட்டது. மேலும் இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்நிலையில் இப்படத்தின் இந்தி ரீமேக்கில் அஜய் தேவகன் நடிக்கயுள்ளார்.

ராட்சசன் : ராம்குமார் இயக்கத்தில் விஷ்ணு விஷால், அமலாபால் நடிப்பில் வெளியான திரில்லர் படம் ராட்சசன். இப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்நிலையில் இப்படம் ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. ராட்சசன் படத்தின் ஹிந்தி ரீமேக்கில் அக்ஷய் குமார் மற்றும் ரகுல் ப்ரீத் சிங் ஆகியோர் நடிக்கின்றனர்.

Next Story

- Advertisement -