நடிப்பு அசுரன் விக்ரம்.. திறமையை நிரூபித்த 5 படங்கள்

உலக நாயகன் கமலஹாசனுக்கு அடுத்தபடியாக தனது உடலை வருத்திக்கொண்டு சினிமாவுக்காக பல தியாகங்கள் செய்தவர் விக்ரம். மேலும் மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர். விஜய் ரசிகர்கள், அஜித் ரசிகர்கள் என அனைத்து தரப்பு ரசிகர்களுக்கும் விக்ரமை பிடிக்கும். அவ்வாறு விக்ரம் தனது நடிப்பு திறமையை முழுவதுமாக காட்டிய 5 படங்களை பார்க்கலாம்.

சேது : பல நடிகர்களின் தேர்வுக்குப் பிறகு தான் விக்ரமுக்கு இப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இப்படம் வெளியான போது விக்ரமுக்கு அந்த அளவு மார்க்கெட் இல்லை. இதனால் முதலில் இப்படத்தை பார்க்க யாரும் வரவில்லை. அதன் பிறகு படத்தின் விமர்சனத்தால் திரையரங்குகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. மேலும் விக்ரமுக்கு சியான் என்ற பட்டம் கிடைத்தது காரணமும் இப்படம் தான்.

பிதாமகன் : பாலா இயக்கத்தில் மற்றொரு வித்தியாசமான படத்தில் விக்ரம் நடித்தது தான் பிதாமகன். இப்படத்தில் சுடுகாட்டு பாடலை தவிர வேறு எதுவும் தெரியாது ஒரு சித்தனாக விக்ரம் மிரட்டி இருந்தார். மற்ற நடிகர்கள் தயங்கும் கதாபாத்திரத்தில் விக்ரம் துணிச்சலாக நடித்ததற்காக அனைவரிடத்திலும் பாராட்டு கிடைத்தது. மேலும் இப்படத்திற்காக தேசிய விருதையும் பெற்றார் விக்ரம்.

அந்நியன் : இப்படத்தில் ஒரே மனிதருக்குள் மூன்று மாறுபட்ட அவதாரங்கள் இருக்குமா என எல்லாரையும் வியக்கச் செய்தது. விக்ரம் படத்தில் அப்பாவியான அம்பி, காதல் மன்னனாக ரெமோ, கொலைகாரனாக அந்நியன் என மூன்று அவதாரங்களையும் மாற்றி மாற்றி அசத்தலான நடிப்பை வெளிக் காட்டி இருந்தார்.

தெய்வத்திருமகள் : இப்படத்தில் ஐந்து வயதுக் குழந்தையின் தந்தையாக மனவளர்ச்சி குன்றிய கிருஷ்ணா கதாபாத்திரத்தில் விக்ரம் நடித்திருந்தார். இப்படத்தில் விக்ரம் ஐந்து வயது குழந்தையாகவே மாறி இருந்தார். அவருடைய பேச்சு, பாவனை எல்லாமே அப்படித்தான் இருந்தது. மேலும், இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது.

ஐ : இயக்குனர் ஷங்கரின் பிரமாண்ட இயக்கத்தில் உருவான படம்தான் ஐ. இப்படத்தில் மிஸ்டர் மெட்ராஸ் ஆக வேண்டும் என்ற லட்சியத்துடன் பல தடைகளைச் சந்தித்து தனது கனவை நிறைவேற்றிக் கொள்கிறார் விக்ரம். மேலும் எமிஜாக்சன் விக்ரமை ஒரு மாடல் ஆக மாற்ற வேண்டும் என முயற்சிக்கிறார். இந்நிலையில் சிலரின் சதியால் விக்ரமுக்கு சுவிட்சர்லாந்தில் இருந்த வரவழைக்கப்பட்ட ஐ வைரஸ் செலுத்தப்படுகிறது. இதனால் விக்ரம் உடல் கூன்விழுந்து கொடூரமாக மாறுகிறார். பின்பு தன்னை இப்படி செய்தவர்களை ஆக்ரோஷமாக அழிக்கிறார்.

Next Story

- Advertisement -