Connect with us
Cinemapettai

Cinemapettai

shankar-ram-charan-cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

சங்கர், ராம் சரண் படத்தில் இணையும் 5 முன்னணி நடிகர்கள்.. பட்ஜெட்டை கேட்டு தலை சுற்றி விழுந்த தயாரிப்பாளர்

சங்கர் அடுத்ததாக ராம் சரணை வைத்து பான் இந்தியா படம் ஒன்றை இயக்க உள்ளார். தற்காலிகமாக RC15 என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தின் படப்பிடிப்புகள் மே மாத இறுதியில் தொடங்க உள்ளதாக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.

மேலும் சங்கர் இயக்கத்தில் உருவாகும் இந்தப் படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என அனைத்து மொழிகளிலும் ஒரே நேரத்தில் வெளியாக உள்ளது. சங்கரின் முந்தைய படங்களைப் போலவே இந்தப் படமும் பெரிய பட்ஜெட்டில் உருவாகி வருகிறது.

ஏற்கனவே போட்ட பட்ஜெட்டில் படமெடுக்க முடியுமா என்ற சந்தேகத்தில் இருக்கும் தயாரிப்பு தரப்புக்கு மேலும் அதிர்ச்சி கொடுக்கும் நிலையில் சங்கர் தன்னுடைய படங்களில் சேர்ந்து உள்ள சில விஷயங்கள் படத்திற்கு நல்லதாக அமைந்தாலும் தயாரிப்பு தரப்புக்கு தேவையில்லாத செலவாக இருக்கிறதாம்.

RC15 படத்தில் 20 முதல் 25 நிமிடம் அளவுள்ள ஒரு முக்கிய கதாபாத்திரம் ஒன்று உள்ளதாம். இதற்காக ஐந்து மொழிகளில் முன்னணி நடிகர்களாக இருக்கும் ஐந்து பேரை அந்த ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க உள்ளார்களாம்.

அதாவது தமிழில் அந்த கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடித்தால், அதே கதாபாத்திரத்தை தெலுங்கில் பவன் கல்யாண் அல்லது சிரஞ்சீவி நடிக்கலாம். அதேபோல் கன்னட மொழியில் முன்னணி நடிகராக வரும் உபேந்திரா நடிக்க வாய்ப்பு உள்ளது. அதைப்போல் மலையாளத்தில் மோகன்லாலும், இந்தியில் சல்மான்கானும் நடித்தால் படம் வேற லெவல் வெற்றி பெறும் என தயாரிப்பு தரப்பின் மண்டையை கழுவி வருகிறாராம் ஷங்கர்.

அந்தந்த மொழிகளில் இந்த நடிகர்களின் சம்பளத்தை கேட்டால் தலை சுற்றுகிறது. இந்த நேரத்தில் ஒரு குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடிக்க அவர்களை கூப்பிட்டால் மொத்தமாக தயாரிப்பு தரப்பை இழுத்து மூடிவிட்டு போகவேண்டியது தான் என்கிறார்கள். இருந்தாலும் படம் 500 கோடி, ஆயிரம் கோடி வசூல் செய்யும் என தயாரிப்பாளரை உசுப்பேத்தி வருகிறார்களாம். இதற்குப் பேசாமல் ஐந்து மொழிகளிலும் பிரபலமாக இருக்கும் ஒருவரை நடிக்க வைத்தால் படச்செலவு மிச்சமாகுமே. காது கொடுத்து கேட்பாரா ஷங்கர்?

vijay-sethupathi-cinemapettai

vijay-sethupathi-cinemapettai

Continue Reading
To Top