பெண்கள் மனதை கவர்ந்த மேடி.. தவிர்க்க முடியாத 5 படங்கள்

சினிமாவில் தற்போது வரை அதிக பெண் ரசிகர்களை வைத்துள்ள ஒரு நடிகர் என்றால் அது மாதவன் தான். தன்னுடைய இளமையான தோற்றம், அழகான சிரிப்பு மூலம் அதிக ரசிகர்களை கவர்ந்துள்ளார். இவருடைய துள்ளலான நடிப்பால் பல ஹிட் படங்களை கொடுத்துள்ளார். மாதவன் நடிப்பில் சூப்பர் ஹிட்டான 5 படங்களை பார்க்கலாம்.

அலைபாயுதே : மணிரத்னம் இயக்கத்தில் மாதவன், ஷாலினி மற்றும் பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் அலைபாயுதே. புதுவிதமான காதலை ரசிகர்களை கவரும் விதத்தில் எடுத்திருந்தார் மணிரத்னம். இப்படத்தில் மாதவன் காதல் கணவனாக கார்த்திக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது.

மின்னலே : கௌதம் மேனன் காதல் படங்கள் எடுப்பதில் வல்லவர். அவர் இயக்கத்தில் மாதவன், ரீமாசென், அப்பாஸ் நடிப்பில் காதல் திரைப்படமாக வெளியானது மின்னலே. இப்படத்தில் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருந்தார். இப்படத்தில் கல்லூரியில் அடாவடித் செய்யும் மாணவனான ராஜேஷ் ஆக மாதவன் நடித்து இருந்தார். இப்படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் ஹிட்டானது.

ரன் : லிங்குசாமி இயக்கத்தில் மாதவன், மீரா ஜாஸ்மின், விவேக் மற்றும் பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் ரன். இப்படத்தில் சிவா கதாபாத்திரத்தில் மாதவன் நடித்து இருந்தார். மேலும் இப்படத்திற்காக சிறந்த நடிகருக்கான ஃபிலிம்ஃபேர் விருதை மாதவன் பெற்றார். ரசிகர்கள் மத்தியில் ரன் படம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

யாவரும் நலம் : மாதவனின் மாறுபட்ட நடிப்பில் வெளியான திரைப்படம் யாவரும் நலம். விக்ரம் குமார் இயக்கத்தில் ஹாரர் படமாக வெளியான இப்படத்தில் மாதவன் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். தனது குடும்பத்தை காப்பாற்றும் முயற்சியில் ஒரு குடும்பத் தலைவனாக மனோகர் கதாபாத்திரத்தில் அசத்தியிருந்தார்.

இறுதிச்சுற்று : குத்துச் சண்டையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் இறுதிச்சுற்று. இப்படத்தை சுதா கொங்கரா இயக்கியிருந்தார். இறுதிச்சுற்று படத்தில் குத்துச்சண்டை பயிற்சியாளராக பிரபு செல்வராஜ் கதாபாத்திரத்தில் மாதவன் நடித்து இருந்தார். இப்படத்தில் தன்னுடைய எதார்த்தமான மற்றும் துணிச்சலான நடிப்பின் மூலம் பாராட்டை பெற்றார்.

Next Story

- Advertisement -