வம்பே வேண்டாம் என நடிப்பில் மட்டும் கல்லா கட்டும் 5 இயக்குனர்கள்.. பான் இந்தியா படங்களில் கலக்கும் சமுத்திரக்கனி

இயக்குனர்களில் சிலர் இப்போது ஹீரோக்களாகவும், வில்லன்களாகவும், காமெடியன்களாகவும் தமிழ் சினிமாவில் கலக்கி வருகின்றனர். தங்களது படத்தில் மட்டுமில்லாமல் மற்ற இயக்குனர்களின் படங்களிலும் இவர்கள் நடிக்கிறார்கள். கோலிவுட்டின் மிக முக்கிய இயக்குனர்களில் சிலர் இப்போது சிறந்த நடிகர்களாக மாறியிருக்கிறார்கள்.

நடிப்பில் கல்லா கட்டும் 5 இயக்குனர்கள்:

சசிகுமார்: இயக்குனர் பாலா மற்றும் அமீரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர் சசிகுமார். மௌனம் பேசியதே, ராம் போன்ற படங்களில் உதவி இயக்குனராக பணிபுரிந்த இவர், சுப்ரமணியபுரம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு பரீட்சையமானார். அதன் பின்னர் நாடோடிகள், சுந்தரபாண்டியன், வெற்றிவேல் போன்ற படங்களில் தன்னுடைய சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தினார்.

Also Read: இயக்குனர் அவதாரத்தை கைவிட்ட சசிகுமார்.. எல்லாத்துக்கும் காரணம் இந்த விஷயம் தான்!

சமுத்திரக்கனி: பல தொலைக்காட்சி தொடர்களை இயக்கி வந்த சமுத்திரக்கனி உன்னை சரணடைந்தேன் படத்தின் மூலம் சினிமா இயக்குனர் ஆனார். சுப்ரமணியபுரம் படத்தில் வில்லனாக நடித்த சமுத்திரக்கனி இப்போது வில்லன் கேரக்டரிலும், குணசித்திர கதாபாத்திரங்களிலும் கலக்கி வருகிறார். இவருடைய சமீபத்திய படமான ஆர் ஆர் ஆரில் நடிக்க சம்பளமே வேண்டாம் என கூறினார். இவரது நடிப்பில் அசந்து போன ராஜமௌலி 2 கோடி சம்பளமாக கொடுத்தார்.

பிரபுதேவா: இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் என ரசிகர்களால் அழைக்கப்படும் பிரபு தேவா நடன இயக்குனராக தன்னுடைய வாழ்க்கையை தொடங்கி, பின்னர் முன்னணி ஹீரோக்களில் ஒருவரானார். பின்னர் தளபதி விஜயின் போக்கிரி படம் மூலமாக இயக்குனராக அறியப்பட்ட பிரபு தேவா இப்போது மீண்டும் ஹீரோவாகி இருக்கிறார்.

Also Read: தளபதியால் டென்ஷனில் சசிகுமார்.. சூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சுவாரஸ்யம்

எஸ் ஜெ சூர்யா : அஜித், விஜயை வைத்து அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்த எஸ் ஜெ சூர்யா, நீண்ட இடைவெளிக்கு பிறகு நியூ படத்தின் மூலம் ஹீரோ ஆனார். தன்னுடைய வித்தியாசமான நடிப்பினால் சினிமா ரசிகர்களை கைக்குள் வைத்திருக்கும் இவர் இப்போது வில்லனாகவும் கலக்கி வருகிறார். செல்வராகவனின் நெஞ்சம் மறப்பதில்லை படத்தில் இவருடைய நடிப்பு பிரமிக்க வைப்பதாக இருக்கும்.

அமீர்: இயக்குனர் பாலாவின் உதவி இயக்குனராக இருந்த அமீர், தன்னுடைய முதல் படமான மௌனம் பேசியதே மூலம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றார். தேசிய விருது படமான பருத்தி வீரனை இயக்கிய இவர் இப்போது நடிப்பில் கலக்கி வருகிறார். வடசென்னை படத்தில் இவர் நடித்த ராஜன் கேரக்டரை யாராலும் மறக்க முடியாது .

Also Read: விஜய் சேதுபதியை பின்பற்றும் சசிகுமார்.. இனிமேல் தான் இருக்கு என்னோட ஆட்டம்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்