ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 10, 2024

சர்ச்சைக்கு பஞ்சமில்லாத திரிஷா.. 38 வயதிலும் திருமணத்திற்கு தடையாக நிற்கும் 5 சம்பவங்கள்

திரிஷா தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான விஜய், அஜித், சூர்யா, தனுஷ் போன்ற நடிகர்களுடன் ஜோடியாக நடித்துள்ளார். கிட்டத்தட்ட 19 வருடங்களுக்கு மேலாக திரைத்துறையில் இருக்கும் திரிஷா தற்போது வரை கதாநாயகியாக மட்டுமே நடித்து வருகிறார்.

இந்நிலையில் இவர் வாழ்க்கையில் பல சர்ச்சைகளில் சிக்கியுள்ளார். முதலாவதாக சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் வருண் மணியனுடன் த்ரிஷாவுக்கு 2015 இல் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. ஒரு சில காரணங்களால் இவர்கள் தங்களது நிச்சயதார்த்தத்தை முறித்துக் கொண்டனர்.

ராணா டகுபதி மற்றும் திரிஷா இருவரும் உறவில் இருப்பதாக கூறப்பட்டது. ஆனால் அதை இருவரும் மறுத்து வந்தனர். அதன் பிறகு இவர்கள் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை சுசித்ரா தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு இருந்தார். அதன் பிறகு அவர்கள் இதனை ஏற்றுக் கொண்டனர்.

rana-trisha-cinemapettai-01
rana-trisha-cinemapettai-01

பாடகி சுசித்ரா தனது சமூக வலைத்தளங்களில் பல நடிகர், நடிகைகளின் அந்தரங்க புகைப்படங்களை வெளியிட்டதால் கோலிவுட் சினிமாவில் ஆட்டம் கண்டது. அதில் ஹன்சிகா மோத்வானி, ஆண்ட்ரியா, சின்மயி, அனிருத், அமலாபால், திரிஷா, தனுஷ் என பல நட்சத்திரங்களின் புகைப்படங்களை வெளியிட்டு இருந்தார். அதில் திரிஷா தனுஷின் படுக்கையில் ஒன்றாக இருக்கும் புகைப்படமும், ராணா டகுபதி திரிஷா இருவரும் முத்தமிடும் புகைப்படங்களும் வெளியாகி சர்ச்சையானது.

திரிஷா பீட்டாவின் பிராண்ட் அம்பாசிடராக இருந்தார். அப்போது ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில் பீட்டாவுக்கு எதிராகவும் போராடினர். அப்போது திரிஷா ஜல்லிக்கட்டுக்கு எதிராகவும், பீட்டாவுக்கு ஆதரவாகவும் இருந்தார். இதனால் சமூக ஊடகங்கள் என எல்லா இடங்களிலும் திரிஷாவை கேலி செய்தனர். அதன் பிறகு திரிஷா, நடிகர் சங்கம் நடத்திய ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கலந்துகொண்டு இதற்கு ஆதரவு தெரிவிப்பதாக கூறினார்.

ஜல்லிக்கட்டு சர்ச்சையால் த்ரிஷா தனது ட்விட்டர் கணக்கை முடக்கி இருந்தார். மேலும் நான் அடுத்த நடவடிக்கை எடுக்கும் வரை டுவிட்டர் கணக்கு செயல்படாது என கூறியிருந்தார். அதன் பிறகு ஒரு மாதம் கழித்து தனது திரைப்படத்தை விளம்பரப்படுத்துவதற்காக மீண்டும் ட்விட்டர் கணக்கை செயல்படுத்தினார். இப்படி வாழ்க்கை முழுக்க சர்ச்சை நிறைந்த திரிஷாவிற்கு 38 வயது ஆகியும் திருமணம் நடப்பதற்கான அறிகுறியே இல்லையாம். இதுபோன்ற சர்ச்சையான சம்பவங்கள்தான் திருமணத்திற்கு தற்போதுவரை தடையாக இருப்பதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

- Advertisement -spot_img

Trending News