முரட்டுத்தனமான நடிப்பில் அசத்திய ராணா டகுபதியின் 5 படங்கள்.. தமிழில் சாதனை படைத்த தெலுங்கு ஹீரோ

தெலுங்கு சினிமாவில் வெளியான லீடர் படத்தின் மூலம் அறிமுகமானவர் ராணா டகுபதி. இவருக்கு தெலுங்கு சினிமாவை காட்டிலும் தமிழ் சினிமாவிலும் ரசிகர்கள் அதிகம். மேலும் ராணா டகுபதி தமிழிலும் சில படங்களில் நடித்து அசத்தியுள்ளார். அவ்வாறு தமிழில் ராணா டகுபதிக்கு வரவேற்பு கிடைத்த 5 படங்களை பார்க்கலாம்.

பெங்களூர் நாட்கள் : மலையாளத்தில் வெளியான பெங்களூர் டேய்ஸ் என்ற படத்தின் ரீமேக் தான் பெங்களூர் நாட்கள். இப்படத்தில் ஆர்யா, ஸ்ரீதிவ்யா, ராணா டகுபதி, பாபி சிம்ஹா, ராய் லட்சுமி மற்றும் பலர் நடித்திருந்தனர். இப்படத்தில் ஸ்ரீதிவ்யாவின் கணவராக சிவபிரசாத் கதாபாத்திரத்தில் ராணா நடித்திருந்தார்.

ஆரம்பம் : விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜித், ஆர்யா, நயன்தாரா, டாப்சி, ஆர்யா, ராணா டகுபதி மற்றும் பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் ஆரம்பம். இப்படத்தில் ஏசிபி சஞ்சய்யாக ராணா டகுபதி நடித்திருந்தார். இப்படத்தில் அவரது கதாபாத்திரம் பலராலும் ஈர்க்கப்பட்டது. மேலும் இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

பாகுபலி : பிரமாண்ட பட்ஜெட்டில் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா டகுபதி, அனுஷ்கா, ரம்யா கிருஷ்ணன், சத்யராஜ், நாசர் மற்றும் பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் பாகுபலி. இப்படத்தில் ராணா பல்வால் தேவன் என்ற கதாபாத்திரத்தில் மிரட்டி இருந்தார்.

பாகுபலி 2 : பாகுபலி படத்தின் தொடர்ச்சியான இப்படத்தில் ராணா டகுபதிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருந்தது. மேலும் இப்படத்தின் இறுதிக் காட்சிகளில் அனைவரையும் மிரள செய்திருந்தார் ராணா. இவருடைய உடல்வாகும், நடிப்பு ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியது. மேலும் இப்படத்தில் பிரபாஸுக்கு இணையான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார் ராணா.

காடன் : பிரபுசாலமன் இயக்கத்தில் ராணா டகுபதி, விஷ்ணு விஷால், புல்கட் சாம்ராட் மற்றும் பலர் நடிப்பில் 2021 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் காடன். இப்படத்தில் யானைகளுடன் வசிக்கும் காட்டு மனிதரான பண்டேவாக ராணா நடித்திருந்தார். இப்படத்திற்காக ராணா ஆறு வாரங்கள் சைவ உணவை மட்டுமே சாப்பிட்டு 15 கிலோ எடை குறைத்தாராம்.

Next Story

- Advertisement -