தமிழில் வெளியான 5 பிளேபாய் படங்கள்.. கமல் விளையாடிய 2 படங்கள்

தமிழ் சினிமாவின் பல கதையம்சம் கொண்ட திரைப்படங்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அந்த வகையில் மாஸ் ஹீரோவாக உள்ள சில நடிகர்கள் பிளேபாய் கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியுள்ளனர். அவ்வாறு 80, 90களில் வெளியான பிளேபாய் படங்களை பார்க்கலாம்.

சிகப்பு ரோஜாக்கள் : பாரதிராஜா இயக்கத்தில் கமல்ஹாசன், ஸ்ரீதேவி மற்றும் பலர் நடிப்பில் வெளியாகி 175 நாட்களுக்கு மேல் ஓடி வெற்றி பெற்ற படம் சிகப்பு ரோஜாக்கள். இப்படத்தில் ப்ளேபாயாக கமலஹாசன் நடித்து இருந்தார். இளம் வயதில் பெண்களால் பாதிக்கப்படும் ஒரு இளைஞர் பெண்களை காதலித்து அவர்களை கொலை செய்கிறார்.

நெற்றிக்கண் : எஸ்பி முத்துராமன் இயக்கத்தில் ரஜினிகாந்த், இலட்சுமி, சரிதா மற்றும் பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் நெற்றிக்கண். இப்படத்தில் ரஜினிகாந்த் இரட்டை வேடத்தில் அப்பா, மகனாக நடித்திருந்தார். இப்படத்தில் அப்பா கதாபாத்திரத்தில் சக்கரவர்த்தியாக ரஜினி ப்ளேபாயாக நடித்திருந்தார்.

டிக் டிக் டிக் : பாரதிராஜா இயக்கத்தில் கமல்ஹாசன், மாதவி, ராதா மற்றும் பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் டிக் டிக் டிக். இப்படம் 1981 இல் வெளியானது. இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். இப்படத்தில் கமலஹாசன் திலீப்பாக பிளேபாய் கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி இருந்தார்.

நூறாவது நாள் : மணிவண்ணன் இயக்கத்தில் விஜயகாந்த், மோகன், நளினி, சத்யராஜ் மற்றும் பலர் நடிப்பில் 1984-ல் வெளியான திரைப்படம் நூறாவது நாள். திரில்லர் படமாக வெளியான இப்படம் 12 நாட்களில் எடுக்கப் பட்டிருந்தது. இப்படத்தில் மோகன் ப்ளே பாயாக நடித்திருந்தார். மேலும் நூறாவது நாள் படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது.

சின்ன வீடு : பாக்யராஜ் இயக்கி, நடித்து 1985 இல் வெளியான திரைப்படம் சின்ன வீடு. இப்படத்தில் கல்பனா, அனு, கோவை சரளா மற்றும் பலர் நடித்திருந்தனர். இப்படத்தில் பாக்யராஜ் அழகான பெண்ணை திருமணம் செய்து கொள்ளும் எண்ணத்தில் இருப்பார். ஆனால் பெற்றோர் வற்புறுத்தலின் காரணமாக விருப்பமில்லாத பெண்ணைத் திருமணம் செய்து கொள்வார். இதனால் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்ள பாக்யராஜ் முயற்சிக்கிறார்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்