கவுண்டமணியை வைத்து வெற்றி கண்ட 5 படங்கள்.. எத்தனை முறை பார்த்தாலும் திகட்டாத காமெடி

தமிழ் சினிமாவில் காமெடி ஜாம்பவான் கவுண்டமணியின் பிறந்த நாள் இன்று. அவருக்கு சமூக வலைத்தளங்களில் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. இவருடைய நகைச்சுவையை அடுத்தடுத்த தலைமுறைகளும் பார்த்து மகிழ்ச்சி அடைகின்றனர். தற்போது கவுண்டமணி சினிமாவில் நடிக்கவில்லை என்றாலும் அவருடைய பழைய படங்களின் வீடியோக்களை பார்த்து ரசிகர்கள் மகிழ்ந்து வருகின்றனர். அவ்வாறு கவுண்டமணி நடிப்பில் வெளியான சிறந்த 5 படங்களை பார்க்கலாம்.

கரகாட்டக்காரன் : கங்கை அமரன் இயக்கத்தில் ராமராஜன், கனகா, கோவை சரளா, கவுண்டமணி செந்தில் ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் கரகாட்டகாரன். இப்படத்தில் கவுண்டமணியின் கெட்டப்பும், காமெடியும் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்தது. மேலும் செந்திலின் வாழைப்பழ காமெடி இன்றுவரை ஃபேமஸ் ஆக உள்ளது. இப்படத்தின் வெற்றிக்கு கவுண்டமணி, செந்தில் இருவரின் காமெடியும் வலு சேர்த்தது.

உள்ளத்தை அள்ளித்தா : சுந்தர் சி இயக்கத்தில் கார்த்திக், ரம்பா, கவுண்டமணி, மணிவண்ணன் மற்றும் பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் உள்ளத்தை அள்ளித்தா. இப்படம் முழுவதும் காமெடி ஜானரில் எடுக்கப்பட்டது. இப்படத்தில் வாசுவாக கவுண்டமணி நடித்து இருந்தார். மேலும் இவருடைய காமெடிக் ஆகவே இந்த படம் சூப்பர் டூப்பர் ஹிட்டானது.

முறைமாமன் : சுந்தர் சி இயக்கத்தில் ஜெயராமன், குஷ்பூ, கவுண்டமணி மனோரமா மற்றும் பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் முறைமாமன். இப்படத்தில் ஜெயராமனின் அண்ணனாக கவுண்டமணி நடித்து இருந்தார். முறைமாமன் படத்தில் கவுண்டமணியின் நகைச்சுவை பலராலும் கவரப்பட்டது.

சிங்காரவேலன் : ஆர் பி உதயகுமார் இயக்கத்தில் கமலஹாசன், குஷ்பு மற்றும் பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் சிங்காரவேலன். இப்படத்தில் கவுண்டமணி ட்ரம்ஸ் மணியாக நடித்திருந்தார். இப்படத்தில் கவுண்டமணியுடன் இணைந்து வடிவேலும் நடித்திருந்தார். இப்படத்திலும் கவுண்டமணியின் கவுண்டர்கள் நல்ல வரவேற்பை பெற்றது.

ஜென்டில்மேன் : ஷங்கர் இயக்கத்தில் அர்ஜுன், மதுபாலா, மனோரமா, கவுண்டமணி, செந்தில் மற்றும் பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் ஜென்டில்மேன். இப்படத்தில் கவுண்டமணி, செந்தில் இடையே ஆன நகைச்சுவை காட்சிகள் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்தது. மேலே படத்தில் சென்டிமென்ட் காட்சிகளிலும் கவுண்டமணி அசத்தியிருப்பார்.

Next Story

- Advertisement -