விட்டுக் கொடுப்பதை வலியுறுத்தி ஜெயித்துக் காட்டிய 5 படங்கள்.. எப்பவுமே மௌசுள்ள பாசகதைகள்

விட்டுக் கொடுப்பவன் கெட்டுப் போவதில்லை என்ற பழமொழியை எல்லோரும் கேட்டிருப்போம். அதற்கேற்ப தமிழ்சினிமாவில் விட்டுக் கொடுப்பதை வலியுறுத்தி ஜெயித்துக் காட்டிய படங்களும் உண்டு. சாதாரணமாக குடும்பம், உறவு, நட்பு, காதல் ஆகியவற்றில் விட்டுக் கொடுப்பதால் ஏற்படும் நன்மைகளை வெளிப்படுத்தும் வகையில் வெளியான படங்களை பார்க்கலாம்.

பாண்டவர் பூமி : சேரன் இயக்கத்தில் அருண் விஜய், ராஜ்கிரண், ரஞ்சித், விஜயகுமார், சார்லி, ஷமீதா மற்றும் பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் பாண்டவர் பூமி. இப்படத்தில் காதல் ஜோடி, குடும்பத்திற்காக காதலையே விட்டுக் கொடுக்க தயாராக இருக்கிறார்கள். ஆனால் ரஞ்சித் தனது தங்கை போல முக ஜாடை உடைய அக்கா மகளை ஏற்க மறுத்த அந்த காதலையே ஜெயிக்க வைக்கிறார்.

உடன்பிறப்பே : சசிகுமார், சமுத்திரகனி, ஜோதிகா சூரி மற்றும் பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் உடன்பிறப்பு. அண்ணன், தங்கை சென்டிமென்ட் படமாக இப்படம் அமைந்திருந்தது. கணவனுக்கு, அண்ணனுக்கும் நடக்கும் பிரச்சனையில் ஜோதிகா அண்ணனிடம் தான் பேசுவதைக் காட்டிலும் தன் கணவனை பேச வைக்க வேண்டும் என்ற முயற்சியில் ஈடுபடுகிறார். பின்பு அதில் வெற்றி பெற்றாரா என்பதே இப்படத்தின் கதை.

பாபநாசம் : கமலஹாசன், கவுதமி, கலாபவன் மணி மற்றும் பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் பாபநாசம். இப்படத்தில் தன் மகளுக்கு ஏற்படும் சிக்கலை எப்படி புத்திசாலித்தனத்துடன் கையாண்டு கமல் காப்பாற்றுகிறார் என்பதே இப்படத்தின் கதை. கடைசிவரை ஒரு பொய்யை விட்டுக்கொடுக்காமல் காப்பாற்றி வந்த கமல் கடைசியில் உண்மையை ஐஜியிடம் சொல்லியும் இந்த வழக்கில் இருந்து காப்பாற்றபடுகிறார்.

நம்ம வீட்டு பிள்ளை : சிவகார்த்திகேயன், ஐஸ்வர்யா ராஜேஷ், அனு இமானுவேல், சூரி மற்றும் பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் நம்ம வீட்டு பிள்ளை. விட்டுக் கொடுப்பவர்கள் கெட்டுப்போவதில்லை என்பதற்கு எடுத்துக்காட்டான படம்தான் இது. இப்படத்தில் சொந்த குடும்பமே சிவகார்த்திகேயன், அவரது அம்மா, தங்கை ஆகியோரை பிரித்துப் பார்க்கிறது. ஆனால் எந்த இடத்திலும் குடும்பத்தை விட்டு கொடுக்காமல் கடைசியில் வெற்றி காண்கிறார் சிவகார்த்திகேயன்.

36 வயதினிலே : ஜோதிகா, ரகுமான், அபிராமி, நாசர் மற்றும் பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் 36 வயதினிலே. வீட்டில் உள்ள இல்லத்தரசிகளின் பிரதிபலிப்பாக ஜோதிகா இப்படத்தில் நடித்திருந்தார். தன்னுடைய இளமைக் காலத்தில் புரட்சிகரமான சிந்தனைகளுடன் இருந்த ஜோதிகா திருமணத்திற்குப் பிறகு கணவர், குழந்தைக்காக பலவற்றை விட்டுக் கொடுக்கிறார். பின்பு மீண்டும் அவற்றை எவ்வாறு மீட்டெடுத்து வெற்றி காண்கிறார் என்பதே 36 வயதினிலே.

Next Story

- Advertisement -