டாப் ஹீரோக்களுக்கு கம்பேக் கொடுத்த படங்கள்.. வில்லனாக என்ட்ரி கொடுத்து அசத்திய 2 நடிகர்கள்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக வலம் வந்த நடிகர்கள் தொடர்ந்து வெற்றிப் படங்களை கொடுத்து வரும் நிலையில் சில படங்கள் தோல்வி அடைகிறது. அதிலிருந்து மீண்டு வருவதற்காக ஒரு சிறந்த படத்தைத் தேர்ந்தெடுத்து, அந்தப் படத்தின் மூலம் மீண்டும் கம்பேக் கொடுத்துள்ளனர். அவ்வாறு டாப் ஹீரோக்களுக்கு கம்பாக் கொடுத்த படங்களை பார்க்கலாம்.

ஜெயம் ரவி : ஜெயம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான ஜெயம் ரவி அதன்பிறகு, எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி, உனக்கும் எனக்கும் என தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து வந்தார். ஒருகட்டத்தில் அவருடைய படங்கள் பெரிய வரவேற்பு பெறாத நிலையில் தனி ஒருவன் படத்தின் மூலம் மீண்டும் கம்பேக் கொடுத்தார். இப்படத்தில் போலீஸ் ஐபிஎஸ் அதிகாரியாக மித்ரன் கதாபாத்திரத்தில் ஜெயம் ரவி நடித்து இருந்தார்.

மாதவன் : தமிழ் சினிமாவில் சாக்லேட் பாய் என்று அழைக்கப்படுபவர் நடிகர் மாதவன். இவருக்கு ஏராளமான பெண் ரசிகர்கள் உண்டு. அலைபாயுதே, மின்னலே போன்ற பல ஹிட் படங்களை கொடுத்துள்ளார் மாதவன். அதன்பிறகு தமிழில் சில படங்கள் வெற்றி பெறாத நிலையில் மற்ற மொழி படங்களில் கவனம் செலுத்தி வந்தார். மீண்டும் இறுதிச்சுற்று படத்தின் மூலம் மாதவன் கம்பேக் கொடுத்தார். இப்படத்தில் குத்துச் சண்டை பயிற்சியாளராக மாதவன் நடித்திருந்தார்.

அரவிந்த்சாமி : பிளாக்பஸ்டர் ஹிட் படமான தளபதி படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் அரவிந்த்சாமி. அதன்பிறகு ரோஜா, பம்பாய் ஆகிய படங்களில் நடித்து சாக்லேட் பாயாக வலம் வந்தார். இந்நிலையில் பெண்களின் கனவு நாயகன் அரவிந்த்சாமி, வில்லனாக என்ட்ரி கொடுத்த படம் தனிஒருவன். இப்படத்தில் சித்தார்த் அபிமன்யுவாக மிரட்டியிருந்தார் அரவிந்த்சாமி.

அருண் விஜய் : சுந்தர் சியின் முறை மாப்பிள்ளை படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் அருண் விஜய். அதன்பிறகு துள்ளி திரிந்த வானம், பாண்டவர் பூமி போன்ற வெற்றி படங்களை கொடுத்தார். அருண் விஜய்க்கு கம்பேக் கொடுத்த படம் என்றால் அது அஜித்தின் என்னை அறிந்தால். இப்படத்தில் வில்லனாக விக்ரம் கதாபாத்திரத்தில் அருண் விஜய் நடித்திருந்தார். இப்படம் இவருக்கு மிகப் பெரிய புகழை வாங்கி தந்தது.

ராகவா லாரன்ஸ் : தமிழ் சினிமாவில் இயக்குனர், நடிகர், நடன இயக்குனர், இசையமைப்பாளர், பின்னணி பாடகர் என பன்முகத்தன்மை கொண்டவர் ராகவா லாரன்ஸ். இவருடைய திரைவாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்த படம் முனி. இப்படத்தை ராகவா லாரன்ஸ் இயக்கியிருந்தார். இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து காஞ்சனா, காஞ்சனா 2 என்ற தொடர்ந்து வெற்றிப் படங்கள் படத்தையும் இயக்கி இருந்தார்.

Next Story

- Advertisement -