fbpx
Connect with us

தமிழ் இசையமைப்பாளர்களின் சம்பளம் எவ்வளவு தெரியுமா? அடங்கப்பா, தலை சுத்துதுடா சாமி!

Tamil Cinema News | சினிமா செய்திகள்

தமிழ் இசையமைப்பாளர்களின் சம்பளம் எவ்வளவு தெரியுமா? அடங்கப்பா, தலை சுத்துதுடா சாமி!

தமிழ் சினிமாவில் படத்துக்குப்படம் நடிகர்களின் சம்பளம் எப்படி ஏறிக்கொண்டே செல்கிறதோ, அதே மாதிரி ஹிட் பாடல்களை கொடுக்க கொடுக்க இசை அமைப்பாளர்களின் சம்பளமும் கோடிகளை தொட்டு வருகிறது.

அந்த வகையில் ஆஸ்கார் நாயகன் ஏ ஆர் ரகுமான் தான் முதலிடத்தில் உள்ளார். ஒரு படத்துக்கு 7 கோடி வரை சம்பளம் வாங்கிக்கொண்டு இருக்கிறாராம். கடைசியாக விஜய்யுடன் தொடர்ந்து மூன்று படங்களில் பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

அவரைத் தொடர்ந்து இரண்டாவது இடத்தில் இசையமைப்பாளர் அனிருத் இடம் பெற்றுள்ளார். மிக விரைவில் உச்சத்தை அடைந்த அனிருத் தற்போது 4 கோடி சம்பளம் வாங்கிக்கொண்டு இருக்கிறாராம்.

இவர்களைத் தொடர்ந்து இளையராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜா ஆகியோர் தலா 1.5 கோடி வாங்குகிறார்கள். அதற்கடுத்து ஒரு கோடி சம்பளத்தில் டி இமான் மற்றும் ஹாரிஸ் ஜெயராஜ் இடம் பெறுகின்றன.

சந்தோஷ் நாராயணன் மற்றும் ஜிவி பிரகாஷ் ஆகியோர் தலா 75 லட்சமும், ஹிப்ஹாப் தமிழா மற்றும் ஜிப்ரான் ஆகியோர் தலா 50 லட்சமும் சம்பளம் வாங்குவதாக தகவல்கள் கிடைத்துள்ளது.

இவர்களை தொடர்ந்து சேன் ரொல்டன், சாம் c.s. ஆகியோர் அடுத்தடுத்த கட்டத்தில் உள்ளன. இதில் விரைவில் டாப் டென் லிஸ்டில் சாம் சி எஸ் இடம்பெறுவார் என தெரிகிறது.

Continue Reading
To Top