Top 10 Serials in TRP: சின்னத்திரை பொருத்தவரை மக்களை என்டர்டைன்மென்ட் பண்ணுவதற்கு எத்தனையோ சேனல்கள் பல நிகழ்ச்சிகளை ஒளிபரப்பு செய்தாலும், அதில் முதலிடத்தில் ஒய்யாரமாக இருப்பது சன் டிவி சேனல் தான்.
அந்த வகையில் ஒவ்வொரு வாரமும் எந்த சேனல்கள் டிஆர்பி ரேட்டிங்கில் அதிகமான இடத்தை பிடித்திருக்கிறது என்பதை தெரிந்து கொள்ளவும் ரசிகர்கள் ஆர்வமாக இருப்பார்கள். அப்படி இந்த வாரம் டிஆர்பி-யில் முதல் 10 இடத்தை கெட்டியாக பிடித்த சீரியல்களைப் பற்றி பார்க்கலாம்.
இந்த வாரம் 5.84 புள்ளிகளைப் பெற்று 10-வது இடத்தில் இருப்பது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற ஆகா கல்யாணம் சீரியல். 9-வது இடத்தில் 6.36 புள்ளிகளை பெற்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன் 2 சீரியல், மற்றும் 8-வது இடத்தில் பாக்கியலட்சுமி சீரியல் 7.27 புள்ளிகளை பெற்றிருக்கிறது.
அடுத்ததாக 7-வது இடத்தில் இதுவரை சன் டிவியில் ஐந்து இடத்தை பெற்றிருந்த சுந்தரி சீரியல் இந்த வாரம் 8.2 புள்ளிகளைப் பெற்று ஏழாவது இடத்திற்கு பின்னோக்கிப் போய்விட்டது. இதனை அடுத்து தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் இதுதான் பெஸ்ட் என்று மக்களின் ஆதரவை பெற்று வரும் சிறகடிக்கும் ஆசை சீரியல் 8.32 டிஆர்பி புள்ளிகளை பெற்று 6-வது இடத்தில் இருக்கிறது.
முத்துவை எப்படியாவது அசிங்கப்படுத்தி விட வேண்டும் என்று ஸ்ருதியின் அப்பா, அம்மா மற்றும் ரோகிணி பிளான் பண்ணி கவுப்பதற்கு முயற்சி செய்து வருகிறார்கள். இதிலிருந்து எப்படி முத்து எஸ்கேப் ஆகிறார் என்பது தான் சுவாரஸ்யமான கதையாக வரப்போகிறது.
முதல் ஐந்து இடத்தை ஆக்கிரமித்த சன் டிவி
இதனை அடுத்து 8.35 டிஆர்பி புள்ளிகளை பெற்று 5-வது இடத்தை பிடித்திருப்பது இனியா சீரியல். இனியவை எப்படியாவது சிக்க வைக்க வேண்டும் என்று சூழ்ச்சி நடக்கிறது. இதிலிருந்து தன் மனைவி இனியாவை காப்பாற்ற வேண்டும் என்று விக்ரம் போராடி வருகிறார்.
அடுத்ததாக 8.26 டிஆர்பி புள்ளிகளை பெற்று 4-வது இடத்திற்கு போன வானத்தைப்போல சீரியல். பொன்னியின் சூழ்ச்சியை புரிந்து கொள்ளாமல் துளசி எடுத்த விபரீதம் சின்ராஸுக்கு தெரிந்தால் பொன்னியின் வாழ்க்கை என்னவாகும் என்பதை நோக்கி கதை நகர்ந்து வருகிறது.
இதனை அடுத்து 10.1 டிஆர்பி புள்ளிகளைப் பெற்று 3-வது இடத்திற்கு முன்னோக்கி வந்திருக்கிறது எதிர்நீச்சல் சீரியல். ஆரம்பத்தில் இருந்த மாதிரி கதை தற்போது இல்லாமல் தட்டு தடுமாறி போனாலும் டிஆர்பி ரேட்டிங் இன் படி வெற்றி பெற்று வருகிறது.
அடுத்ததாக 10.14 டிஆர்பி புள்ளிகளைப் பெற்று 2-வது இடத்தில் இருப்பது கயல் சீரியல். இதுவரை கயல், எழில் மீது எந்த வித காதலும் இல்லாமல் இருந்த பொழுது, இப்பொழுதுதான் ஓரளவுக்கு எழிலை புரிந்து கொண்டு காதலித்து கல்யாணத்துக்கு சம்மதம் கொடுத்தார்.
ஆனால் அதற்குள்ளேயும் எழிலின் கடைசி தம்பி குட்டையை குழப்பி குடும்பத்துக்குள் பிரச்சினையை வெடிக்க வைத்து விட்டார். இதனால் வந்த பிரச்சினையை எப்படி சமாளித்து எழில் கயல் ஒன்று செய்கிறார்கள் என்பது மீதமான கதையாக அமையும்.
அடுத்ததாக 11.6 டிஆர்பி புள்ளிகளைப் பெற்று முதல் இடத்தை பிடித்திருப்பது சிங்க பெண்ணே சீரியல். நாடகம் ஆரம்பித்ததில் இருந்து இப்பொழுது வரை மக்களின் பேவரைட் நாடகமாக இருக்கிறது. அதிலும் அன்புவை புரிந்து கொண்ட ஆனந்தி கொஞ்சம் கொஞ்சமாக அவருடைய காதலையும் ஏற்றுக் கொள்வாரா என்பதை ஆவலுடன் எதிர்பார்க்கும் வகையில் கதை நகர்ந்து வருகிறது.