டாப் 10 சயின்டிஃபிக் மூவிஸ்.. சீனர்களையும் வியக்க வைத்த போதிதர்மர்

கோலிவுட்டில் எத்தனையோ ஆக்சன், கமர்சியல், காமெடி மற்றும் த்ரில்லர் படங்கள் வெளிவந்தாலும் அறிவியல் புனைவு படங்களும் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. அந்த வகையில் இதுவரை வெளியான படங்களில் டாப் 10 சயின்டிஃபிக் மூவிஸ் எவை என்பதை பார்ப்போம். அதிலும் ஏழாம் அறிவு படத்தின் மூலம் சீனர்களையும் போதிதர்மர் வியக்க வைத்திருக்கிறார் என்ற விஷயம் தமிழர்களை பெருமை அடைய வைத்திருக்கிறது.

டிக் டிக் டிக்: 2018 ஆம் ஆண்டு இயக்குனர் சக்தி சௌந்தரராஜன் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் ஆகும். இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதலாவது விண்வெளி திரைப்படம் என்ற பெருமையை இப்படம் பெறுகிறது. இந்த படத்தில் ஜெயம் ரவியுடன் ஆரன் அசிஸ், நிவேதா பெத்துராஜ் ஆகியோர் முக்கிய கதாபத்திரங்களில் நடித்துள்ளனர்.

நாம் வசிக்கும் பூமிக்கு விண்கற்களால் ஆபத்து நெருங்குவதை தனது முயற்சியால் எவ்வாறு தகர்த்தெறிவது என்றும் தனது டீமுடன் முயற்சி செய்யும் விதத்திலும் கதைக்களம் அமைந்துள்ளது. படம் முழுவதும் சுவாரசியம் குறையாமல் உள்ளதோடு நம்மை விண்வெளிக்கே அழைத்து செல்வது போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது. இந்தப் படம் அறிவியல் பூர்வமான திரைபடங்களின் வரிசையில் 6-வது இடத்தை பிடித்துள்ளது.

Also Read: அடுத்தடுத்து பல நூறு கோடி பட்ஜெட்டில் உருவாகும் சூர்யாவின் 6 படங்கள்.. எல்லாரும் எதிர்பார்க்கிற ஒரே கதாபாத்திரம்

இன்று நேற்று நாளை: 2015 ஆம் ஆண்டு இயக்குனர் ஆர் ரவிக்குமார் இயக்கத்தில் திருக்குமரன் என்டர்டைன்மென்ட் தயாரிப்பில் வெளியான திரைப்படத்தில் விஷ்ணு விஷால், மியா ஜார்ஜ், கருணாகரன், டி எம் கார்த்திக், ஜெயப்பிரகாஷ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஒரு சிறிய விபத்தின் மூலம் நிகழ்காலத்தை விட்டு கடந்த காலத்திற்கு சென்று விடுகின்றனர். அதில் ஏற்படும் பிரச்சனைகளை சமாளித்து எவ்வாறு தப்பிக்கிறார்கள் என்பது போல் படத்தின் கதை அமைந்துள்ளது. இன்று நேற்று நாளை திரைப்படம் அறிவியல் புனைவு திரைப்படங்களின் வரிசையில் 5-வது இடத்தை பிடித்துள்ளது.

இருமுகன்: 2016 ஆம் ஆண்டு இயக்குனர் ஆனந்த் சங்கர் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் ஆகும். இப்படத்தில் விக்ரம், நயன்தாரா மற்றும் நித்யா மேனன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் ஊக்க மருந்தால் உலகத்தை ஆள நினைக்கும் வில்லன் விக்ரமை, ஹீரோ விக்ரம் உருகுலைப்பது போன்று கதைக்களம் அமைந்துள்ளது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று மாபெரும் வெற்றி பெற்றது. இருமுகன் திரைப்படம் டாப் 10 சயின்டிஃபிக் மூவிஸ் லிஸ்டில் 4-வது இடத்தில் உள்ளது.

Also Read: 2ம் பாகம் வரப்போகுதா.? பாபா ரீ ரிலீஸ் ஒரு விமர்சனம்

24: 2016 ஆம் ஆண்டு இயக்குனர் விக்ரம் குமார் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சூர்யாவுடன் சமந்தா, நித்யா மேனன், ரூத் பிரபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர். டைம் ட்ராவலை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருக்கும் இந்த படத்தில் சூர்யா, அப்பா மகன் தோற்றத்திலும் மற்றும் வில்லன் தோற்றத்தில் தன்னுடைய வில்லத்தனமான நடிப்பை வெளிக்காட்டி இருப்பார். இந்தப் படத்தில் சூர்யாவின் வில்லத்தனமான தோற்றம் அனைவரும் ரசிக்கும்படியாக அமைந்துள்ளது. ஆகையால் இந்த படத்திற்கு 3-வது இடத்தை பிடித்துள்ளது.

எந்திரன்: 2010 ஆம் ஆண்டு இயக்குனர் சங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இரட்டை வேடங்களில் நடித்து வெளியான சூப்பர் ஹிட் திரைப்படங்களில் ஒன்றாகும். இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து 2.0 என்ற பெயரில் படத்தின் 2-ம் பாகம் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்றது.

இதில் ரஜினிகாந்த் உடன் ஐஸ்வர்யா ராய், சந்தானம், கருணாஸ் ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படத்தில் ரஜினியின் கதாபாத்திரம் மற்றும் தொழில்நுட்பம் பலரால் பாராட்டப்பட்டு பல விருதுகளையும் வென்றுள்ளது. இதில் சிட்டி என்கின்ற ரோபோவாக சூப்பர் ஸ்டார் தனது அல்டிமேட் நடிப்பை வெளிகாட்டி இருப்பார். இந்தப் திரைப்படங்களின் 2-வது இடத்தை பிடித்துள்ளது .

ஏழாம் அறிவு: 2011 ஆம் ஆண்டு இயக்குனர் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் சூர்யா இரட்டை வேடத்தில் நடித்து வெளிவந்த சூப்பர் ஹிட் திரைப்படங்களில் ஒன்றாகும். இதில் சூர்யாவுடன் சுருதிஹாசன் நடித்துள்ளார். சூர்யா இப்படத்தில் போதிதர்மர் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். 1500 ஆண்டுகளுக்கு முன் இருந்த போதிதர்மரின் டி.என்.ஏ-வை நிகழ்காலத்தில் உள்ள ஒருவரின் உடலில் கண்டுபிடித்து அவரின் மூலம் மர்ம நோயிற்கான மருந்தை கண்டுபிடிப்பது போன்று கதை கரு அமைந்துள்ளது.

நிஜ வாழ்க்கையில் போதிதர்மர் சீனர்களையே வியக்க வைத்திருப்பது இந்த படத்தின் மூலம் பலரும் அறிந்து கொள்ள முடிந்தது. ஆகையால் சிறந்த சயின்டிஃபிக் திரைப்படங்களின் வரிசையில் இந்த படத்திற்கு முதலிடம் கிடைத்திருக்கிறது.

Also Read: 6 உச்ச நட்சத்திரங்களூடன் நடித்த ஒரே நடிகை.. கோலிவுட் முதல் பாலிவுட் வரை ஹீரோக்கள் விட்ட ஜொள்ளு

இதனைத் தொடர்ந்து அறிவியல் புனைவு படங்களின் வரிசையில் சிம்புவின் மாநாடு படம்7-வது இடத்தையும், பிரித்விராஜின் ஒன்பது படத்திற்கு 8-வது இடமும், லிஜோ ஜோஸ் பெல்லிசேரியின் சுருளி படத்திற்கு 9-வது இடமும், மாயவன் படத்திற்கு 10-ம் இடமும் கிடைத்திருக்கிறது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்