fbpx
Connect with us

Cinemapettai

நிஜ சம்பவங்களை வைத்து கோலிவுட்டில் எடுக்கப்பட்ட போலீஸ் படங்கள். டாப் 3 லிஸ்ட் .

Entertainment | பொழுதுபோக்கு

நிஜ சம்பவங்களை வைத்து கோலிவுட்டில் எடுக்கப்பட்ட போலீஸ் படங்கள். டாப் 3 லிஸ்ட் .

தமிழ் சினிமாவை பொறுத்தவரை போலீஸ் சம்பந்தப்பட்ட படங்களுக்கு  என்றுமே ரசிகர் கூட்டம் உண்டு. உண்மையில் நடந்த குற்றங்களை இன்ஸ்பிரஷன் ஆக எடுத்து கதை பண்ணப்பட்ட படங்கள்  நம் கோலிவுட்டில் ஏராளம்.

தீரன் அதிகாரம் ஒன்று

karthi in theeran

ட்ரீம் வாரியர்ஸ் பிக்ச்ர்ஸ் தயாரிப்பில் வினோத் இயக்கத்தில் நடிகர் கார்த்திநடிப்பில் கடந்த வாரம் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம் ‘தீரன் அதிகாரம் ஒன்று’.

இந்த திரைப்படம் 1995- 2005 ஆண்டுவரை தமிழகத்தில் கொடூர கொலை, கொள்ளைகளை அரங்கேற்றிய வடமாநில பவாரியா கொள்ளையர்களை வைத்து எடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் பெரும் அச்சத்தை ஏற்படுத்திய பவரியா கொள்ளைக் கும்பலை தமிழக காவல்துறையினர் பல மாத முயற்சிக்குப் பிறகு கைது செய்தனர்.

வடக்கு மண்டல ஐஜி எஸ்.ஆர்.ஜாங்கிட் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. அந்த தனிப்படையில் திருவள்ளூர் டிஎஸ்பிக்களாக இருந்த விஜயகுமார், அருளரசு, ஜெயக்குமார்  உட்பட காவல்துறை அதிகாரிகள் பலர் இடம்பெற்றிருந்தனர்.

DGP SR Jangid

எனினும் நாம் இப்பொழுது பேசப்போகும் படங்களிலும் உண்மைச்சம்பவங்களின் சதவிகிதம் தான்  அதிகம், இயக்குனரின்  கற்பனை அளவு  மிக குறைவு தான். நம் லிஸ்டில் உள்ள படங்கள்  பிளாப் அல்லது ஹிட் என்பதை  பொறுத்தது அல்ல.

விசாரணை 2015

வெற்றிமாறன் இயக்கத்தில் விசாரணை படத்தில் அட்டகத்தி தினேஷ், ஆனந்தி,  ஆடுகளம் முருகதாஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அப்பாவி தமிழக தொழிலார்களை, செய்யாத குற்றத்திற்க்காக கைது செய்த ஆந்திரா போலீஸ், அவர்களை அடித்து துன்புறுத்தினர். அதில் இருந்து தப்பி வந்த ஆட்டோ ஓட்டுநர் சந்திர குமார் எழுதியதே ‘லாக்கப்’ நாவல்.  சந்திரகுமார் எழுதிய ‘லாக்கப்’ நாவலை அடிப்படையாகக் கொண்டு தயாரானது.

Auto Chandra(Centre), Daughter Jeeva(Left),Director Vettrimaaran (Right)

‘விசாரணை’ திரைப்படம்.  அதேபோல, இந்தப் படத்தில் வரும் சம்பவங்களில் பெரும்பான்மையானவை நிஜ வாழ்க்கையில் இருந்து எடுக்கப்பட்டவை.63 வது தேசிய விருது வழங்கும் விழாவில் சிறந்த திரைப்படமாக இப்படம் தேர்ந்தெடுக்கப்பட்டது. ‘விசாரணை’ திரைப்படம் ஆஸ்கர் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டது.

வனயுத்தம் 2013

வனயுத்தம் 2013 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம். சத்தியமங்கலம் காட்டுப்பகுதியில் வாழ்ந்த சந்தனக்கடத்தல் வீரப்பனின் வாழ்க்கையையும், எப்படி கொல்லப்பட்டார் என்பதனையும் கதைக்களமாகக் கொண்ட படமாகும். இத்திரைப்படத்தில் அர்ஜூன் (காவல்துறை அதிகாரி விஜயகுமார்) , கிஷோர் (வீரப்பன்), விஜயலட்சுமி (வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி)  முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படத்தினை இப்படத்தின் இயக்குனர் ஏ. எம். ஆர். ரமேஷ்.

இப்படம் பல எதிர்ப்புகள், தடைகளை தாண்டி ரிலீஸ் ஆனது, எனினும் வணிக ரீதியாக இப்படம் தோல்வியடைந்தது.

புலன் விசாரணை 1990

இப்படத்தினை ஆர்.கே.செல்வமணி இயக்கினார். விஜயகாந்த் கதாநாயகனாக நடித்த இப்படத்தில் ரூபினி, ஆனந்த்ராஜ், சரத்குமார் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்தனர். ஆட்டோ ஷங்கர் என்ற கொலைகாரனை பற்றிய உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்ட படம் புலன்விசாரனை.

ஆட்டோசங்கரின் இயற்பெயர் கௌரி சங்கர். 1987-88களில் ஒன்பதுக்கு மேற்பட்டவர்களை கடத்தி  கொலை செய்து உடல்களை எரித்தோ அல்லது அவரது வீட்டினுள் தளத்தில் புதைத்தோ கொலைக்குற்றம் புரிந்தார்.

இது ஒரு சிறு தொகுப்பு மட்டுமே.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top