fbpx
Connect with us

Cinemapettai

டாப் 10 புதிய ஆண்டிராய்டு ஆப்கள் – டெக்பேட்டை

google android

News | செய்திகள்

டாப் 10 புதிய ஆண்டிராய்டு ஆப்கள் – டெக்பேட்டை

இந்த மாதத்தில் அதிகம் பிரபலமாகிவரும் புதிய பத்து ஆண்டிராய்டு ஆப்களை பற்றி பாப்போம் வாங்க

1.TestingCatalog

android

நாம் play storeல் இருந்து தரவிறக்கும் அனைத்து ஆப்களும் முழுமையாக test செய்த பிறகே வெளிவருகின்றன. ஆனால் play storeல் வெளிவராத ஆனால் beta testing செய்யப்பட்டு கொண்டிருக்கும் கோடிக்கணக்கான ஆப்கள் நமக்கு வெளியீட்டிற்கு முன்பே தரவிறக்கம் செய்துகொள்ள இந்த Testing Catalogue செயலி பயன்படுகிறது. இதை கொண்டு பல்வேறு புதிய செயலிகளை மற்றவர்களுக்கு முன்னாள் நாம் தரவிறக்கி பயன்படுத்த முடியும். இதன் நோக்கம் என்னவென்றால் ஆப்கள் வெளிஈடாவதற்கு முன்பே அதை மக்கள் பயன்படுத்தி அவர்கள் தரும் feedback கொண்டு ஆப்பின் செயல்பாடுகளை சரிசெய்வதாகும்.

இதன் தரவிறக்க லிங்க்

https://play.google.com/store/apps/details?id=com.core.testingcatalog.beta_catalog&hl=en

2. Movie Hub

android

 

android

திரைப்படங்களை தரவிறக்க பல ஆப்கள் ஏற்கனவே உள்ளன. ஆனால் இந்த ஆப் மிகவும் எளிதானதாகவும், வேகமானதாகவும், பல categories கொண்டதாகவும் உள்ளது. மேலும் இந்த ஆப் மூலம் ஆங்கிலம், தமிழ், ஹிந்தி, தெலுங்கு என பல மொழிப்படங்களையும் நம்மால் காண முடியும்.

இதன் தரவிறக்க லிங்க்

https://play.google.com/store/apps/details?id=hotmo.movol&hl=en
3.Paid Free

android

இந்த ஆப் இன்னும் டெஸ்டிங்கில்தான் உள்ளது. ஆனால் இந்த ஆப் மூலம் டிஜிட்டல் சந்தையில் கட்டணத்தில் மட்டுமே கிடைக்கும் கிடைக்கும் சில ஆப்களை இலவசமாக தரவிறக்க முடியும். அனைத்து கட்டண ஆப்களையும் இலவசமாக பெற முடியாது, இதில் காட்டப்படும் ஆப்களை மட்டுமே பெற முடியும். மேலும் புதிதாக ஏதாவது ஆப் இலவசமாக கிடைக்கிறது என்றால் அதற்கான notification உங்களுக்கு வந்துவிடும்.

இதன் தரவிறக்க லிங்க்

https://play.google.com/store/apps/details?id=com.chikisoftworks.pagf&hl=en

4. Jarvis Arc Launcher – Beta

android

Iron Man பட ரசிகர்கள் அனைவருக்கும் பரிட்சயமான பெயர்தான் இந்த Jarvis. இந்த Laucher ஆப் இன்னும் Beta வெர்சனில் மட்டுமே வருகிறது. இந்த ஆப் மூலம் உங்கள் கைபேசியில் Jarvis கணினி போன்ற visual effectஐ கொண்டு வர முடியும்.

இந்த launcherன் வசதிகள்
Smooth icon animations,Custom icon pack for many apps,WQHD OS 11 wallpapers ,Beautiful Wallpaper to decorate your screen,Simulates best sci-fi phone,Power efficient
Desktop clock,Live Weather,CPU usage monitor,RAM usage monitor,Internal/ External SD card monitor,Network signal monitor,Wifi signal monitor,Battery level monitor

இதன் தரவிறக்க லிங்க்

https://play.google.com/store/apps/details?id=com.launcher.starklauncher&hl=en
5.Roomle 3D/AR Furniture Catalog

android

மிகவும் பயனுள்ள ஆச்சர்யமான ஆப் இது. AR எனப்படும் Augmented reality ஆப்களின் வரவுகள் சமீபகாலமாக அதிகரித்து வருகின்றன. இந்த ஆப்பும் அந்த வகையை சார்ந்ததுதான். இந்த ஆப் மூலம் உங்கள் வீட்டின் ஹால், ரூம் போன்ற இடங்களுக்கு தேவையான furnitureகளை பொருத்தி பார்த்து அது அந்த இடத்திற்கு பொருந்துகிறதா என்று சரிபார்க்க முடியும். இதன் virtual reality மிகவும் நன்றாக உள்ளது. நீங்கள் அந்த furnitureஐ நகர்த்தி கொள்ளவும், அளவு மாற்றிக்கொள்ளவும் இதில் வசதியுள்ளது.

இதன் தரவிறக்க லிங்க்

https://play.google.com/store/apps/details?id=com.roomle.android&hl=en
மேலே உள்ள ஆப்களை தரவிறக்கி பயன்படுத்திப்பாருங்கள். மீண்டும் சில நல்ல ஆப் வரவுகளுடன் உங்களை சந்திக்கிறோம்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top