fbpx
Connect with us

Cinemapettai

தளபதியின் கோட்டையை சல்லி சல்லியாக நொறுக்கிய தல.. வசூலில் ருத்ர தாண்டவம்

Tamil Cinema News | சினிமா செய்திகள்

தளபதியின் கோட்டையை சல்லி சல்லியாக நொறுக்கிய தல.. வசூலில் ருத்ர தாண்டவம்

தமிழ்சினிமாவில் தற்போது திரைப்படங்கள் அனைத்தும் வசூல் ரீதியாக வரிசைப்படுத்தப்பட்டு வருகின்றன. அதுவும் வருட இறுதி என்றால் சொல்லவே வேண்டாம். தமிழகத்தில் உள்ள பிரபல திரையரங்குகளில் போட்டி போட்டுக்கொண்டு முதல் 10 படங்களுக்கான அறிக்கை வெளிவிடுவார்கள்.

அந்த வகையில் சில தினங்களுக்கு முன்பு சென்னையில் முக்கிய தியேட்டரான ரோகினி, அந்த லிஸ்டை வெளியிட்டு இருந்தது. அதில் தளபதி விஜய் நடிப்பில் வெளியான பிகில் படம் முதல் இடத்தை பிடித்தது அனைவரும் அறிந்ததே.

வெற்றி தியேட்டரிலும் பிகில் முதலிடத்தை பிடித்துள்ளது. அதனைத் தொடர்ந்து பேட்ட மற்றும் விஸ்வாசம் ஆகிய திரைப்படங்கள் உள்ளன. எதிர்பாரா வகையில் கோமாளி திரைப்படம் நான்காவது இடத்தை பிடித்து அசத்தியுள்ளது.

அதேபோல் நீண்டகாலமாக தளபதி விஜய்யின் கோட்டையாக கருதப்படும் திருநெல்வேலி ராம் சினிமாஸ், இந்த வருடத்தில் டாப் 10 படத்தின் வசூல் விவரங்களை அறிவித்தது.

அந்த வகையில் தளபதி விஜய்யின் பிகில் படத்தை பின்னுக்கு தள்ளி தல அஜித்தின் விஸ்வாசம் முதலிடத்தை பெற்று மாஸ் காட்டியுள்ளது. 

இதனால் தல ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். 

 

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top